கண்ணன் வீட்டிற்குள் கல்லெறிந்து உள்ளார் முல்லை. இதனை பார்த்த ஐஸ்வர்யா சண்டைக்கு வந்துள்ளார்.

Pandian Stores Episode Update 27.10.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். ரூமிற்குள் மூர்த்தியும் தனமும் கயல் குறித்து பேசிக் கொண்டதை தொடர்ந்து கதிர் சொன்ன ஏடிஎம் ஐடியா நல்ல ஐடியா தானே ஏன் வேண்டாம் என்று சொன்னீங்க. வேண்டாம் என்று சொன்னதும் அவன் முகம் சுருங்கிப் போச்சு என கூறுகிறார். அதன்பிறகு தனத்திடம் வேறு ஒருவர் பேன்சி ஸ்டோர் கடைக்கு கேட்டதாக அதற்கு சரியென சொல்லி விட்டதாக கூறுகிறார். அந்த நேரத்தில் கதிரும் அங்கதான் இருந்தான் என கூறுகிறார். அவ எங்க கடைக்கு வருகிறான் கட்டிடம் கட்டும் இடத்திலேயே தானே இருக்கான் என தனம் சொன்னதும்தான் மூர்த்திக்கு அந்த ஞாபகம் வருகிறது. அதன்பிறகு அவங்கிட்ட அதை சொல்லி இருக்கலாம்ல என தனம் கூறுகிறார்.

கண்ணன் வீட்டில் கல்லெறிந்த முல்லை.. சண்டைக்கு வந்த ஐஸ்வர்யா - பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசோட் அப்டேட்
துளசி மாலை அணிவதால், ஏற்படும் பலன்கள்

மூர்த்தி பேசியதை நினைத்து வெளியில் அமர்ந்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார் முல்லை. அந்த நேரத்தில் கதிர் வெளியே சென்று இங்க என்ன பண்ணுற ஏன் உன் முகம் உம்முனு இருக்கு என கேட்கிறார். ஏன் நீங்க எது சொன்னாலும் அது சரியா இருக்காதுன்னு இந்த வீட்ல இருக்கவங்க நினைக்கிறாங்க என கேட்கிறார். அண்ணனை கேட்காமல் சொன்னது என்னோட தப்பு தானே. அண்ணே முடிவெடுத்தால் அது சரியாத்தான் இருக்கும். நீயா எதுவும் கற்பனை பண்ணாதே. ஏன் நான் சொல்லி இந்த வீட்டில எதையுமே கேட்கலனு சொல்ற, டோர் டெலிவரி பண்ற விஷயம், கடை கட்டுவது என எல்லாமே நான் சொன்ன ஐடியா தானே என கூறி முல்லையை சமாதானம் செய்கிறார். அவரின் தோள் மீது கை வைத்து ரொமான்ஸ் செய்கிறார். இந்த நேரத்தில் கண்ணனும் ஐஸ்வர்யாவும் கையில் மாவு பாக்கெட்டுடன் வீட்டிற்கு வருகின்றனர். இதனை பார்த்த முல்லை இப்பதான் வீட்டுக்கு வராங்க இனிமே சமைச்சு சாப்பிட்டு எப்ப தூங்குறது என கூறுகிறார். இவர்கள் இருவரையும் பார்த்த ஐஸ்வர்யா என்ன சின்ன மாமா ரொமான்ஸா? கல்யாணம் ஆகி மூணு வருஷம் ஆயிடுச்சி இன்னும் இருட்டுல உட்கார்ந்து ரொமான்ஸா என கிண்டலடிக்கிறார். உடனே கதிர் முல்லை மேலிருந்து கையை எடுத்து விடுகிறார். வெளிச்சத்தில தானே இருக்கோம் என முல்லையிடம் கதிர் கேட்க அவ ஒரு ஆளுன்னு அவ சொல்றான்னு அதை ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கீங்க என முல்லை கூறுகிறார்.

Sivakarthikeyan-னின் Doctor படம் முதல் மூன்று நாட்களில் Mega வசூல் சாதனை.! | Tamil Nadu BO | News HD

பின்னர் ஒரு நிமிஷம் இருங்க என முல்லை உள்ளே சென்று இட்லியையும் குழம்பையும் எடுத்து வந்து கண்ணன் விட்டு வெளியே வைத்து விடுகிறார். அவர்களுக்கு இதை எப்படியாவது தெரியப்படுத்த வேண்டும் என வீட்டின் உள்ளே சிறிய கல்லை எடுத்து எறிகிறார். ஆனால் எந்தவித ரெஸ்பான்ஸ் இல்லாததால் ஒரு பெரிய கல்லை தூக்குகிறார். நீ என்ன வீட்டையே இடித்து விடுவ போல என அந்த கல்லை கீழே போடச் சொல்கிறார் கதிர். பிறகு மீண்டும் கல் எடுத்து எறிய ஐஸ்வர்யா வெளியே வருகிறார். என்ன கோவமா இருந்தாலும் பேசித் தீர்த்துக்கோங்க கல்லெடுத்து எதுக்கு எரியறீங்க என கேட்கிறார். பிறகு கண்ணன் வந்து என்ன ஆச்சி என கேட்க கல் எடுத்து அடிக்கிறாங்க என கூறுகிறார். பிறகு கதிர் கண்ணனுக்கு சைகை காமிக்க டிபன் பாக்ஸில் சாப்பாடு இருப்பதை கவனிக்கின்றனர். பிறகு திறந்து பார்த்துவிட்டு ஐஸ்வர்யா இப்படி தினமும் சாப்பாடு வைக்கிறதா இருந்தால் பெரிய கல்லெடுத்து கூட எறிங்க தப்பே இல்லை என கூறுகிறார். பிறகு கதிரும் முல்லையும் சிரித்து விட்டு உள்ளே செல்கின்றனர்.

மறுநாள் விடிந்ததும் முல்லை பின்புறத்தில் குழந்தைகளின் துணி வைத்துக் கொண்டிருக்கிறார். அப்போது குட்டி குட்டி ட்ரெஸ்ஸை பார்த்து சிரிக்கிறார் முல்லை. இதனை பார்த்து கதிர் மெதுவாக வந்து பின்பக்கத்தில் நின்று பயமுறுத்துகிறார். என்ன பண்ணிட்டு இருக்க எனக் கேட்க இந்த ட்ரெஸ்ஸை பார்க்கும் போது சிரிப்பா வருது என கூறுகிறார். குழந்தைங்க டிரஸ்சை பார்த்து சிரிப்பா வருதுன்னு சொன்ன முதல் ஆள் நீதான் என சொல்கிறார். பிறகு முல்லை நமக்கு குழந்தை பிறந்தால் எப்படி இருக்கும்னு ஞாபகம் வந்திடுச்சு. எனக்கு இப்பவே உடனே குழந்தை வேண்டும் என கூறுகிறார். நீயும் இப்படி சொன்னதில் இருந்து நானும் வித விதமாக கற்பனை பண்ணி பார்த்துட்டு இருக்கேன் என கூறுகிறார் கதிர். இதையெல்லாம் அமைதியாக ஒட்டு கேட்ட மீனா பின்னர் இருவரையும் கலாய்க்க தொடங்கிவிடுகிறார். கதிர் அங்கிருந்து எஸ்கேப் ஆக முயற்சி செய்தும் அவரைப் பிடித்து கலாய்க்கிறார். பிறகு அவர் கயல் பாப்பாவை தூக்கிக் கொண்டு உள்ளே செல்கிறார்.

பிறகு மீனா முல்லையிடம் என்ன குழந்தை பெத்துகணும்னு ஆசை வந்துடுச்சு போல என கேட்கிறார். எல்லாம் உங்க ரெண்டு பேராலத்தான் என சொல்கிறார் முல்லை. பெத்துகங்க பெத்துகங்க ஆனால் குழந்தை பிறந்தா இந்த மாதிரி ரொமான்ஸ் பண்ண முடியாது என சொல்கிறார். அப்புறம் கதிர் அங்கிள் மாதிரி நடந்துப்பார். எல்லா ஆம்பளைங்களும் அப்படித்தான் என கூறுகிறார். அதெல்லாம் அவர் மாற மாட்டார் என்று முல்லை சொல்ல இப்போ அப்படித்தான் சொல்வீங்க குழந்தை பிறந்து ஆறு மாசம் கழிச்சு சொல்லுங்க. அட போங்க என முல்லை உள்ளே செல்கிறார். அப்ப துணிய யார் துவைப்பா என கேட்க நீங்களே துவைங்க என கூறுகிறார். இங்க வந்தது தப்பா போச்சு என துணி துவைக்க துவங்குகிறார் மீனா. இத்துடன் முடிகிறது இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட்.