கண்ணனை அடிக்க பாய்ந்த மூர்த்தியை தடுத்து நிறுத்தி உள்ளார் தனம்.

Pandian Stores Episode Update 26.11.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். கண்ணன் கடை திறந்து வியாபாரம் செய்து விஷயமறிந்த மூர்த்தி அவரை வீட்டிற்குள் அழைக்கிறார். வீட்டிற்குள் வந்த கண்ணனிடம் ஆளில்லாத நேரத்தில் கடையை திறந்து வியாபாரம் பார்த்தியா? வீட்டுக்குள்ள புகுந்து சாவியை எடுத்து யா? ஆமா இல்லைன்னு கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லு என மூர்த்தி கேட்க ஆமாம் என கூறுகிறார் கண்ணன். வியாபாரத்தைப் பற்றி உனக்கு என்ன தெரியும். இதுல போன் வேற பரிசா தந்திருக்க. கடையைத் திறந்த தாள வந்த லாபத்தை விட நஷ்டம் தான் அதிகமாக இருக்கும் என அவரை அடிக்கப் பாய்கிறார்.

மனிதரின் இயல்பை புரிந்து கொள்.!

கண்ணனை அடிக்க பாய்ந்த மூர்த்தி.. கடைசி நிமிடத்தில் தனம் கொடுத்த அதிர்ச்சி‌ - பாண்டியன் ஸ்டோர் இன்றைய முழு எபிசோட் அப்டேட்

உடனே மூர்த்தியின் கையை பிடித்து தடுத்து நிறுத்துகிறார் தனம். பக்கத்தில் இருக்க மகாலஷ்மி ஸ்டோரில ஆஃபர் கொடுக்க கூட்டம் எல்லாம் அங்க போயிடுச்சு. அந்தக் கஸ்டமர்கள் நம்ப கையை விட்டுப் போயிடக் கூடாதுன்னு தான் கடையை திறந்து என கூறுகிறார். இந்த காரணத்தை ஏற்றுக் அதன்மீது பாண்டியன் ஸ்டோர்க்கு என தனி மதிப்பு உள்ளது. இதை எல்லாம் யோசிக்காமல் தான் இத்தனை நாள் கடையை மூடி விட்டு வெளியே போனோமா? ஒரு மாசம் கடையை மூடி இருந்தாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கஸ்டமர் வேற எங்கேயும் போக மாட்டாங்க என கூறுகிறார். என் கண்ணு முன்னாடியே நிக்காத போக சொல்லு என தனத்திடம் கூற அவர் அமைதியாகவே நிற்கிறார். நீ எப்படி சொல்லுவேன் அவன் மடியில் தூக்கி வைத்து கொஞ்சி என்னை திட்டுகிறார்.

பிரபலங்களின் பார்வையில் Maanaadu படம் எப்படி இருக்கு? – வாங்க பார்க்கலாம்

கண்ணனை அடிக்க பாய்ந்த மூர்த்தி.. கடைசி நிமிடத்தில் தனம் கொடுத்த அதிர்ச்சி‌ - பாண்டியன் ஸ்டோர் இன்றைய முழு எபிசோட் அப்டேட்

பிறகு கண்ணன் அழுது கொண்டே வெளியே செல்கிறார். ஐஸ்வர்யா அவரை சமாதானம் செய்து வீட்டிற்கு கூட்டிச் செல்கிறார். இந்தப் பக்கம் தனம் அழுது கொண்டிருக்க அந்த நேரத்தில் மூர்த்தி வர அவனை எதுக்கு மாமா அப்படி கிட்ட நீங்க. அவர் செய்தது தப்பா கூட இருக்கட்டும் தப்பு செஞ்சா தானே நீங்களும் எல்லா விஷயத்தையும் கத்துக்கிட்டீங்க. அவனால ஒரு நஷ்டமும் வராது. அப்படியே வந்தாலும் அதை சமாளிப்போம் என்று கூறுகிறார். கதிரும் அவன் செய்தது பெரிய தப்பு தான், ஆனா இவ்வளவு திட்டி இருக்க வேண்டாம் என கூறி கண் கலங்குகிறார். பிறகு தனம் அவன் எதையாவது செய்து உங்க மனதில் இடம் பிடிக்க வேண்டுமென நினைக்கிறான். உங்களுக்கு அது புரியலையா என்று கேட்டுவிட்டு இனி அவனை இப்படி திட்டாதிங்க என உள்ளே சென்று விடுகிறார்.

பிறகு எனக்கு மட்டும் அவன் மேல அக்கறை இல்லையா. அவன் நல்லா இருக்கணும்னுதான் ஏன் இதை சொல்கிறேன் என கூறுகிறார். உடனே முல்லை நீங்க கண்ணன் வீட்டில் எதிர்க்க நின்னு கத்தியதும் தெருவுல இருக்க எல்லோரும் வேடிக்கை பார்த்தார்கள். தனம் அக்கா கிட்ட இது வரைக்கும் இரண்டு பேர் என்ன பிரச்சனை என்று கேட்டாங்க. அதுதான் அக்கா வருத்தமாக இருக்காங்க என சொல்கிறார். பிறகு இருவரும் கடைக்கு கிளம்புகின்றனர்.

அதன்பிறகு மீனாவின் அப்பா ஜீவா மீனா முல்லை கதிர் ஆகியோர் ஒன்றாக கூடுகின்றனர். கண்ணன் செய்த விஷயம் கேட்ட ஜீவா இப்படி அல்லாமல் செய்திருக்கிறான் என அதிர்ச்சியோடு கேட்கிறார். மீனா கண்ணனை நான் கூட என்னமோ நெனச்சேன் என சொல்கிறார். மேலும் அவன் எதுக்கு இப்போ கடைக்கு வரவில்லை என அப்பாவிடம் கேட்க அவர் உண்மையை சொல்ல வரும்போது கதிர் அதனை தடுத்து பேச்சை மாற்றி விடுகிறார்.

பிறகு முல்லை அவர் தான் சொல்ல வந்தாங்களே விட்டு இருக்க வேண்டியதுதானே இவங்களுக்காச்சும் உண்மை தெரிஞ்சிருக்கும்ல என கூறுகிறார். ஏற்கனவே கண்ணனை நிறைய திட்டிட்டாங்க இது தெரிஞ்சா அவன் இந்த வீட்டுக்குள்ளேயே வர முடியாமல் போய்விடும் என சொல்கிறார். இருவரும் ரகசியமாக பேசியதைப் பார்த்து விட்ட மீனா என்ன என்று கதிரிடம் கேட்க அவர் முல்லையை கோர்த்துவிட்டு எஸ்கேப் ஆகிவிடுகிறார். மீனா முல்லையிடம் கேட்க அவங்களுக்குத்தான் வேலை இல்லனா உங்களுக்குமா என சொல்லி விட்டு உள்ளே சென்று விடுகிறார்.

பிறகு மீனாவும் உள்ளேயும் அமர்ந்து கொண்டிருக்கும் போது எங்க அப்பா கண்ணனைப் பற்றி ஏதோ சொல்ல வந்தார் அதற்குள்ளே பேச்சு மாறிப்போச்சு. என்னனு கேக்கணும் என அவருடைய அப்பாவுக்கு போன் செய்கிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட்.