பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் முல்லை, மீனாவால் பிரச்சினை வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‌‌

Pandian Stores Episode Update 26.10.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். பேங்க் ஆபீஸர் வந்து ‌ ஏடிஎம் மெஷினை வைப்பதற்காக இடம் வேண்டும் எனக் கூறினார். மாதம் பத்தாயிரம் வாடகையும் ஒரு லட்சம் அட்வான்ஸ் தருவதாக கூறினர். கதிர் அண்ணனிடம் ஒரு வார்த்தை சொல்லி விடுகிறேன் நாளைக்கு நீங்க பணத்தை கொண்டு வாங்க என கூறினார். இதற்கு அடுத்ததாக எல்லாம் நான் வந்த நேரம் என முல்லை கூற நான் அந்த அக்கா நேரம் என நினைத்தேன் என்று கதிர் சொல்கிறார். இதனால் கோபமான முல்லை நான் வீட்டுக்கு கிளம்புகிறேன் என பேக்கை தூக்குகிறார். அதன்பிறகு கதிர் முல்லையை வழிமறித்து போகக்கூடாது என சொல்கிறார். பைக் சாவியை பிடுங்கி கொள்கிறார். அப்பவும் நான் நடந்தே செல்கிறேன் என முல்லை கூற கதிர் அந்த அக்காவிடம் அக்கா ஏதோ பொண்ணு பாக்குறன்னு சொன்னீங்களே என சொல்ல உடனே முல்லை நான் போகல என கூறுகிறார்.

இன்றைய ராசி பலன்.! (26.10.2021 : செவ்வாய்க் கிழமை)

பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் வெடிக்கப் போகும் பிரச்சனை.. மீனா, முல்லை மனதில் ஏற்பட்ட குழப்பம் - பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோட் அப்டேட்

இந்த பக்கம் மீனா தனக்கு தலைவலியாக இருப்பதாக கூற தனம் அப்போ ரெஸ்ட் எடுக்கலாம்னு என சொல்கிறார். இவ வேற சும்மா இருக்க மாட்டா ஒரே அமர்க்களம் பண்ணிக்கிட்டு இருக்கா என கயலை கூறுகிறார் ‌‌ அதன் பிறகு தன் கயலை என்னிடம் கூறி என வாங்கிக்கொண்டு போய் தூங்க செல்கிறார். பிறகு கயலை குளிக்க வைத்த தனம் அவரை அழகு படுத்திக் கொண்டிருந்த போது பிள்ளை அழுவதால் பால் கொடுக்க உள்ளே செல்கிறார். கஸ்தூரியும் அவரது மாமியாரும் கயலை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என சொல்கின்றனர். இதனால் தனம் குழந்தையை தூக்கிக் கொண்டு உள்ளே சென்று விடுகிறார்.

கஸ்தூரி அவரது மாமியாரும் வேறொரு வேலையாக கிச்சனுக்கு எழுந்து சென்று விடுகின்றனர். கயல் தனியாக இருப்பதால் அழுகிறார். கயல் அழும் சத்தம் கேட்டு மீனா ஓடிவந்து பாப்பாவை தூக்கி கொள்கிறார். யாரும் இல்லாமல் கயலை மட்டும் தனியாக விட்டதை எண்ணி அவர் வருத்தப்படுகிறார்.

Superstar Rajinikanth-ன் உண்மையை உடைத்த Soundarya Rajinikanth.! 

கடையில் மூர்த்தி ஜீவாவிடம் கயலை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். மொட்டையடிக்கணும் அவளுக்கு பிறந்த நாள் கொண்டாடணும் என கூறுகிறார். இந்த நேரத்தில் ஒருவர் கடைக்கு வந்து கடை கட்டி மீதி உள்ள இடத்தில் ஒரு குடோன் ஒன்றை கட்டித்தர சொல்கிறார். ‌ நீங்கள் கேட்கிற வாடகையை கொடுத்து விடுகிறேன் என சொல்கிறார். மூர்த்தியும் ஜீவாவும் சரி என முடிவெடுக்கின்றனர்.

அதன் பிறகு அனைவரும் வீட்டில் கயலை கொஞ்சிக் கொண்டிருக்கும் நேரத்தில் கதிர் மூர்த்தியிடம் ஏடிஎம் வைக்க இடம் வேண்டும் என கூறியதை பற்றி சொல்கிறார். நாளைக்கு பணத்தோட வாங்க என சொல்லி இருப்பதாகவும் கூறுகிறார். ஆனால் மூர்த்தி அதெல்லாம் செட்டாகாது நான் வேறொன்றை யோசித்து வைத்திருக்கிறேன். வீட்ல கலந்து பேசாமல் நீயா எப்படி முடிவு எடுக்கலாம் என கூறுகிறார். இதனால் கதிரின் முகம் சுருங்குகிறது. முல்லை இவர் எடுக்கிற முடிவு தப்பா இருக்கும்னு எப்படி இவங்க முடிவு பண்ணலாம் என மனதிற்குள் பேசிக் கொள்கிறார். மேலும் அவரிடம் வேண்டாம் என சொல்லி விடு எனவும் கூறுகின்றனர்.

அதன் பிறகு அனைவரும் சாப்பிடலாம் என எழுந்து செல்கின்றனர். அந்த இடத்தில் மீனா கயலை வைத்துக் கொண்டு அமர்ந்து கொண்டு இருக்க யாரும் கயலை கண்டுக்கவே இல்லை என வருத்தப்படுகிறார். கடையில் என்ன நடந்தது என தெரியாமல் மனதுக்குள் ஏதோ கற்பனை செய்து கொள்கிறார். அதேபோல் மீனா இதற்கு முன்னதாக குடும்பத்தார் அனைவரும் கயலை கொஞ்சிக் கொண்டு இருந்ததை பார்க்காமல் அவர் தவறாக புரிந்து கொள்கிறார்.

இரவில் மூர்த்தியும் தனமும் ரூமிற்குள் கயலுக்கு பிறந்தநாள் கொண்டாடணும் அவளுக்கென ஒரு சேமிப்பு கணக்கை தொடங்கி இப்போதில் இருந்து பணத்தை சேமிக்க வேண்டும் என பேசிக் கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் பிறந்தநாளுக்கு நகை எடுத்து போடணும் என சொல்கின்றனர். இத்துடன் முடிகிறது இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் அப்டேட்.