வீடு திரும்பிய குடும்பத்தாருக்கு எதிர்பாராத அதிர்ச்சி காத்துக் கொண்டிருக்க கண்ணனை அடிக்க பாய்ந்துள்ளார் மூர்த்தி.

Pandian Stores Episode Update 25.11.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். மூன்று நாட்கள் கடையை மூடிவிட்டு சென்னையை சுற்றி பார்க்க பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் சென்றுவிட்டனர். சென்னையில் தமிழ் வீட்டில் தங்கியிருந்த இவர்கள் இன்று வீடு திரும்பினர்.

இன்றைய ராசி பலன்.! (25.11.2021 : வியாழக் கிழமை)

வீடு திரும்பிய குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. கண்ணனை அடிக்கப் பாய்ந்த மூர்த்தி - பாண்டியன் ஸ்டோர் இன்றைய முழு எபிசோட் அப்டேட்

வீட்டுக்கு வந்ததும் ரூமுக்குள் முல்லை கதிரை படுத்து தூங்கி ரெஸ்ட் எடுக்க சொல்ல அவர் கடைக்கு போக வேண்டும் மூன்று நாட்களாக கடை மூடிக் கிடக்கு என கூறுகிறார். கொஞ்ச நேரம் தூங்கிட்டு ரெஸ்ட் எடுத்து அப்புறம் போகலாம் இல்லை என முல்லை சொல்ல கதிர் கேட்கவில்லை. நீ படுத்து ஓய்வெடு என கூறுகிறார். பிறகு இருவரும் மாறி மாறி பேசவே கொஞ்சம் ரொமான்ஸ் ஓடுகிறது.

இந்த பக்கம் ரூமுக்குள் மீனா சென்னையை சுற்றி பார்க்க நீங்க போயிட்டு அந்த தமிழ் வீட்டை மட்டுமே சுத்தி பார்த்துட்டு வந்துட்டோம். அப்பா கேட்டா என்ன சொல்றது என மீனா கேட்கிறார். அவர் எதுக்கு கேட்கப் போகிறார் என ஜீவா சொல்ல அவர் தான் நம்ப ரெண்டு பேரும் தனியாக போய் விட்டு வர சொன்னார். ஆனா அத நீ தான் ஃபேமிலி டிரிப்பா மாத்திட்ட. சரி அப்பா கேட்டார் அண்ணா நீ சட்டையை கழட்டி காமிச்சுடு, அவர் அப்படியே சமாதானம் ஆகி விடுவார். ஜீவா என்னது சட்டையை கழட்டி காமிக்கனுமா என்னடி சொல்லுற என கேட்க அவர் நீ என் பெயரை பச்சை குத்தி இருப்பதை பார்த்தால் ஆஃப் ஆகிவிடுவார். அப்படியே வாங்கி வந்த பொருட்களை எல்லாம் அவர்களிடம் கொடுத்து விட்டு வரலாம் என அவர்களது வீட்டிற்கு அழைக்கிறார் மீனா. பிறகு இருவரும் குளித்துவிட்டு ரெடியாகி மீனா வீட்டுக்கு செல்கின்றனர்.

Maanaadu Public Review | Maanaadu Public Opinion | Maanaadu Public Talk

வீடு திரும்பிய குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. கண்ணனை அடிக்கப் பாய்ந்த மூர்த்தி - பாண்டியன் ஸ்டோர் இன்றைய முழு எபிசோட் அப்டேட்

இந்த பக்கம் தனம் அனைவருக்கும் டீ போட்டு கொண்டு வருகிறார். டீ குடித்துக் கொண்டே மூர்த்தி நம்ப சொந்த ஊரில் சொந்த வீட்டில் வந்து இருந்தா தான் சந்தோஷமா இருக்கு. அதுவும் உன் கையால டீ குடிக்கிறது ரொம்ப நல்லா இருக்கு என கூறுகிறார். உடனே முல்லை அக்காவும் கிச்சன்ல இதைத்தான் சொன்னாங்க. நம்ப வீட்டு கிச்சனில் நின்னாதான் நிம்மதியா இருக்கு என சொன்னாங்க நீங்களும் அதே தான் சொல்றீங்க என கூறுகிறார். எனக்கும் அதே தான் தோணுச்சு அக்கா சொல்லிட்டாங்க நான் சொல்லல எனவும் கூறுகிறார்.

இந்த நேரத்தில் கதிர் வர அவரும் டீ குடித்துவிட்டு உங்க கையால டீ குடித்தால் தான் என ஆரம்பிக்க நிம்மதியா இருக்கு அதைத்தான் சொல்ல வரீங்க என முல்லை கேட்கிறார். ஆமா உனக்கு எப்படி தெரியும் என கதிர் கேட்க இங்கே எல்லாரும் அதையேதான் சொல்லிட்டு இருக்கோம் என கூறுகிறார்.

பிறகு மூர்த்தி கடைக்கு கிளம்பலாமா ஜீவா நேராக கடைக்கு வந்து விடுவான் என கூறுகிறார். இந்த நேரத்தில் கதிருக்கு வழக்கமான வாடிக்கையாளரிடம் இருந்து போன் வருகிறது. அவர் நான் கேட்ட பொருள் எல்லாம் வந்துடுச்சு வரமிளகாய் மட்டும் வரலை அதை மட்டும் கொடுத்து விடுங்கள் என கூறி ஷாக் கொடுக்கிறார். பிறகு யார் கொடுத்து விட்டது என கதிர் கேட்க கண்ணன் தான் கொடுத்து விட்டான். வெளியில வாங்கிக்கலாம் அந்த வழியா போகும்போது கடை திறந்து இருந்தது. சரி இங்கேயே வாங்கிவிடலாம் என போய் லிஸ்ட் கொடுத்தேன் லிஸ்டில் இருக்கும் எல்லாப் பொருளும் வந்து விட்டது. கண்ணன் கடையைத் திறந்து பார்த்து விட்டான் என கூறுகிறார்.

உடனே மூர்த்தி சரவணன் தான் கடையை திறந்ததாக நினைத்து கொண்டு அவரை திட்ட கிளம்புகிறார். இந்த நேரத்தில் சரவணன் வந்து நான் கடையை திறக்கவில்லை கண்ணன்தான் திறந்தான். பரிசுப் பொருள் எல்லாம் கொடுத்தான் என கூறுகிறார். சாவி நீ எதுக்கு கொடுத்த என கேட்க சாவி என்கிட்ட இல்ல கண்ணன் தான் சுவர் ஏறி குதித்து எடுத்தான் என சொல்கிறார்.

இதனால் பயங்கர கடுப்பான மூர்த்தி வெளியே நின்று கொண்டு கண்ணனை கத்தி கூப்பிடுகிறார். தெருவில் இருப்பவர்கள் அனைவரும் வேடிக்கை பார்க்கின்றனர். கண்ணன் வெளியே வந்ததும் அவரை அடிக்க பாய்கிறார் மூர்த்தி. தனம் எல்லோரும் பாக்குறாங்க உள்ள கூப்பிட்டு பேசலாம் என சமாதானம் செய்கிறார். எனக்கு கண்ணனை உள்ளே வர சொல்லி விட்டு உள்ளே செல்கிறார். தனம் கண்ணனை அழைக்க ஐஸ்வர்யாவும் கூட வருகிறார். நீ மட்டும் வாய் என கூற கண்ணன் நீ இங்கேயே இரு ஐஸ்ஸூ என சொல்லிவிட்டு உள்ளே செல்கிறார். எனக்கு உள்ளே கண்ணனும் முடியும் நேருக்கு நேராக பார்த்துக் கொள்வதுடன் இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் முடிவடைகிறது.