அம்மாவை நானே கொன்று விட்டேன் என கண்ணன் கதறி அழுகிறார்.

Pandian Stores Episode Update 23.09.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். வீட்டுக்கு போன கண்ணன் என் அம்மாவை நானே கொன்றேன் என கதறி அழுகிறார். அவசரப்பட்டு கல்யாணம் பண்ணி இருக்க கூடாது வீட்டில சொல்லியிருந்தால் அவங்க என கண்டிப்பா ஏதாச்சும் உதவி செய்திருப்பார்கள். அண்ணி சொன்ன மாதிரியே நான் எதையுமே யோசிக்காமல் பண்ணிட்டேன்.

அம்மாவை நானே கொன்று விட்டேன்... கண்ணனால் குடும்பத்துக்கு காத்திருந்த அதிர்ச்சி - பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய சீரியல் எபிசோட் அப்டேட் ‌

ஹாஸ்பிடலுக்கு அம்மாவைப் பார்க்கப் போனபோது அம்மா என்னை பார்க்க விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டாங்க. கடைசி நேரத்திலேயே அவர் என்னைப் பார்க்காமலேயே போயிட்டாங்க என்ன கதறி அழுகிறார். இன்னொருபுறம் மூர்த்தியும் வீட்டில் அனைவரும் தூங்காமல் அழுது கொண்டே இருக்கின்றனர். அதன்பின் மூர்த்தி தனத்துக்கு ஆறுதல் கூறி அவரை படுத்துக்கொள்ள சொல்கிறார்.

காலையில் விடிந்ததும் பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தார் அம்மாவிற்கு பால் வைக்க எரித்த இடத்துக்கு செல்கின்றனர். அந்த நேரத்தில் அண்ணன் அவர்களுக்கு முன்பாக மொட்டையடித்து அம்மாவிற்கு பால் வைத்துக் கொண்டிருக்கிறார். இதனைப் பார்த்த மூன்று அண்ணன்களும் அதிர்ச்சி அடைகின்றனர். ஆனாலும் யாரும் கண்ணனிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

பின்னர் அம்மாவிற்கு பால் வைத்துவிட்டு அஸ்தியை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு கிளம்புகின்றனர். வீட்டுக்கு கிளம்பிய மூர்த்தி மீண்டும் திரும்பி கண்ணனின் முகத்தைப் பார்க்கிறார். இத்துடன் முடிகிறது இன்றைய எபிசோட். மூர்த்தி கண்ணனை வீட்டுக்கு வாடா என அழைப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.