தனம் அம்மாவால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Pandian Stores Episode Update 22.10.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். கதிருக்கு சாப்பாடு கொண்டு போன இடத்தில் கதிர் முல்லையிடம் நைட் குழந்தை வேணும் என்று சொன்னது பற்றி கிண்டலடிக்க மானத்தை வாங்காதீங்க என கூறுகிறார் முல்லை. அதன் பின்னர் இருவரும் சாப்பிட சென்று விடுகின்றனர்.

தனம் அம்மாவால் குடும்பத்தில் ஏற்பட போகும் குழப்பம்.. கண் கலங்கும் மீனா - பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோட் அப்டேட்
தென்காசி விசுவநாத சுவாமி கோவில் : திருக்கல்யாண திருவிழா இன்று தொடக்கம்

வீட்டில் மீனா போனில் எதையோ பார்த்து சிரித்து கொண்டிருக்க அந்த நேரத்தில் தனத்தின் அம்மா குடிக்க தண்ணி தீர்ந்து போயிடுச்சி எடுத்து வர சொல்ல பின்னாடி இருக்கும் பெரியம்மா என கூறுகிறார். அது எனக்கு தெரியாதா நான் குடமெல்லாம் தூக்க கூடாது, கொஞ்சம் எடுத்து வரியா என கூற நானா எனக்கு குடமெல்லாம் தூக்கி பழக்கம் கிடையாது என கூறுகிறார். பிறகு நானே எடுத்து வரேன் என செல்கிறார் மீனா. ஆனால் அவரால் தண்ணீர் தூக்க முடியாமல் தூக்கி வருகிறார். அடுத்து தனத்தின் அம்மா கீரையை ஆய்ந்து கொடுக்க சொல்ல அதையும் செய்கிறார் மீனா. பிறகு துணி எடுத்து மடித்து வைக்க சொல்கிறார். பாத்திரம் கழுவ சொல்கிறார். மீனா முகம் மாற சரி விடு முல்லை பார்த்துப்பா என சொல்ல நானே பண்ணி விடுகிறேன் பெரியம்மா என சொல்கிறார் மீனா.

Ashwin Frame-ல நின்னாலே Cuteஆ இருப்பாரு – Sridhar Master Speech | Yaathi Yaathi Music Video

பின்னர் மீனா பின்புறத்தில் வேலை செய்து கொண்டிருக்க கயல் பாப்பா அழுகிறது. கயலை தனம் ஆட்டி கொண்டிருக்க அந்த நேரத்தில் தனத்தின் குழந்தை அழுகிறது. மீனா பாத்திரங்களை துலக்கும் நேரத்தில் தனம் மீனா பற்றி கேட்க மீனாவை வேலை வாங்கிட்டு இருக்கேன் என கூறுகிறார் தனத்தின் அம்மா. மீனாவை எந்த வேலையும் வாங்காத அப்புறம் அது தப்பா போய்விடும் என சொல்கிறார் தனம். நீ ஒரு மாசத்துக்கு ரெஸ்ட் எடுக்கணும் என சொல்கிறார் தனத்தின் அம்மா. இருவரும் பாப்பாவை கொஞ்சி கொண்டிருப்பதை பார்த்த மீனா எனக்கு வேலையை சொல்லிட்டு இங்க கொஞ்சலாக்கும், எல்லாமே ஓவரா தான் போகுது என மனதுக்குள் சொல்லி கொள்கிறார்.

கடையில் மூர்த்தி தனியாக சிரித்து கொண்டிருக்க ஜீவா மூர்த்தியை கலாய்க்கிறார். என்னன்னே பயங்கர குதூகலமா இருக்கீங்க என ஜீவா கேட்கிறார். கடைக்கு வருபவர்கள் எல்லாரும் மூர்த்திக்கு வாழ்த்து கூறுகின்றனர். அதன் பின்னர் மூர்த்தி தனக்கு குழந்தை பிறந்தது பற்றி மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறார். ரொம்ப சந்தோஷமா இருப்பதாக கூறுகிறார். கடையில் உக்கார்ந்து இருந்தாலும் மனசு முழுக்க வீட்டின் மேலேயே இருப்பதாக சொல்கிறார். வீட்டில் குட்டி பையன் என்ன பண்ணுவானு ஒரே யோசனையாவே இருக்கு என சொல்ல ஜீவா வீட்டுக்கு போய் பாப்பாவை கொஞ்ச சொல்கிறார். மூர்த்தியை வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார் ஜீவா.

மீனா கயலுக்கு சாப்பாடு ஊட்டி கொண்டிருக்கிறார். கயல் என்கிட்ட சாப்பிடவில்லை, தனம் அக்கா கிட்ட தான் சாப்பிடுவா என மீனா சொல்ல தனத்தின் அம்மா இனிமே கயலை நீயே பாத்துக்க, தனத்துக்கும் இனி குழந்தை இருக்குல்ல என கூறுகிறார். மீனாவின் முகம் மாறுகிறது. மூர்த்தி வந்ததும் கயலை பார்த்து விட்டு உள்ளே சென்று விடுகிறார். மாப்பிள்ளைக்கு புள்ள மேல பாசத்தை பார்த்தியா? கடையில் உட்காரவே முடியல, இனி பெரியப்பா உன்னையெல்லாம் தூக்க மாட்டாரு என தனத்தின் அம்மா கூற மீனா கண் கலங்குகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட்.