அண்ணன்களிடம் சண்டைக்குப் போன கண்ணனை கடும் கோபத்தில் திட்டி தீர்த்துள்ளார் தனம்.

Pandian Stores Episode Update 22.09.21 : தமிழ் சென்னை தெருவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். கண்ணன் வருவதற்கு முன்பாகவே அவருடைய அம்மாவின் உடலை வேறு வழியில்லாமல் அவரது அண்ணன்கள் அடக்கம் செய்து விட்டனர்.

கேப்டன் பதவியிலிருந்து கோலி விலகியது ஏன்? ஒரு பவுலரின் கண்டுபிடிப்பு

அண்ணன்களிடம் சண்டைக்கு போன கண்ணன்.. கடும் கோபத்தில் தனம் - பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோட் அப்டேட்

ஆனால் ஐஸ்வரியா உன்னை இப்படி பார்க்க விடாமல் செய்து விட்டார்களே என கூறியதை கேட்டு கோபமடைந்த கண்ணன் வீட்டிற்குச் சென்று எனது அம்மாவை உன் கண்ல கூட காட்டாமல் கூட்டிட்டு போயிட்டீங்க. உலகத்தில் யாரும் செய்யாததையா செய்து விட்டேன். எனக்கு எதுக்கு இவ்வளவு பெரிய தண்டனை. இல்லாத என் கண்ணுல காட்டாம கூட்டிட்டு போயி அடக்கம் செய்ய நீங்கள் யாரு என சண்டையிட்டார்.

இதனையடுத்து கோபமடைந்த தனது இதுவரைக்கும் உன்கிட்ட நான் எதுவும் பேசல. இதுக்கெல்லாம் யார் காரணம். நீ தானே? அன்னைக்கு ஒரு நிமிஷம் யோசிச்சு இருந்தா அத்தை நம்மளோட இருந்திருப்பாங்க. எதைப் பத்தி யோசிக்காம கல்யாணத்தைப் பண்ணிட்ட.. என்னால இங்க எல்லாரும் எவ்வளவு கஷ்டப்பட்டாங்க தெரியுமா. உனக்கு காட்டாம அத்தைய கொண்டு போய் விடுமா. இந்த வீட்ல இருக்காங்க எப்படி நடந்துப்பாங்கனு உனக்கு தெரியாதா? உனக்காக எவ்வளவு நேரம் காத்திருந்தோம். இதுக்கு மேல வச்சி இருக்க முடியாது அப்படிங்கிறதனாலதான் எடுத்தோம் என கூறுகிறார்.

பைக்கில் உலகம் சுற்ற தயாராகும் Thala Ajith – சாகசப் பெண்ணிடம் ஆலோசனை! 

அதன் பின்னர் கண்ணன் அவரது அம்மாவின் போட்டோவை பார்த்து வருகிறார். ஐஸ்வர்யா கண்ணனின் கையை பிடித்து வீட்டிற்கு கூட்டிச் செல்கிறார். வீட்டிற்கு வந்த கண்ணன் இங்கும் கதறி அழுகிறார்.

இத்துடன் முடிகிறது இன்றைய எபிசோட் அப்டேட். நாளைய எபிசோடில் கண்ணன் அம்மாவை எரித்த இடத்தில் தனியாக சடங்குகளை செய்வது போல் ப்ரோமோ வெளியாகி உள்ளது.