இறந்த அம்மாவை பார்க்க செல்லாமல் கடைக்கு போகிறார் கண்ணன்.

Pandian Stores Episode Update 20.09.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். கண்ணனின் அம்மா தூக்கத்தில் இறந்து போன நிலையில் கண்ணனுக்காக அவருடைய அண்ணன்கள் காத்திருக்கின்றனர். ஆனால் திருச்சிக்கு சென்ற கண்ணனுக்கு அவர்களால் தகவல் சொல்ல முடியவில்லை.

இதை ஏற்றுக்கொள்ள முடியாது, ஐசிசி வரட்டும் : இன்சமாம் வலியுறுத்தல்

இறந்த அம்மாவை பார்க்க செல்லாமல் கடைக்கு போன கண்ணன் - பாண்டியன் ஸ்டோர் சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்.!!

கிராமத்தினரும் உடலை தகனம் செய்யாமல் வைத்திருக்கக் கூடாது என தொடர்ந்து அழுத்தம் கொடுத்து கொண்டே இருப்பதால் வேறு வழியில்லாமல் சடங்குகளை செய்கின்றனர். அதற்குள் கண்ணன் வருவான் என எதிர்பார்த்தவர்களுக்கு இப்போதும் ஏமாற்றம் தான். இருப்பினும் கண்ணன் வராமல் அத்தையின எடுக்க விட மாட்டேன் என தனம் அடம்பிடிக்கிறார். யாரும் இல்லாத காரணத்தினால் உடலை அடக்கம் செய்வதற்கு எடுத்து விடுகின்றனர்.

லாரி விட்டு இறங்கிய கண்ணன் நேராக கடைக்கு செல்கிறான். கடையை மூடி இருக்கவே என்னாச்சு என தெரியாமல் வீட்டுக்குத் திரும்பி அவன் தன்னுடைய அம்மாவின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் பார்த்துவிட்டு அதிர்ச்சி அடைந்து அந்த போஸ்டரை கிழித்து விடுகிறார். அதன் பின்னர் வீட்டுக்குச் செல்லும்போது ஐஸ்வர்யாவை பார்க்கிறார். ஐஸ்வர்யா நடந்ததைக் கூற அதை நம்பாமல் கண்ணன் பேசிக்கொண்டு இருக்கிறார்.

சுடுகாட்டிலும் கொல்லி வைக்காமல் கண்ணன் வந்துவிடட்டும் என காத்திருக்கின்றனர். ஆனால் இவ்வளவு நேரம் எல்லாத் சடங்குகளை முடித்துவிட்டு காத்திருக்கக் கூடாது எனக் கூறுகின்றனர். இங்கு கண்ணனிடம் இரண்டு பேர் வந்து கடைசி நேரத்துல நம்ம கூட பார்க்க முடியலியே என அழுக்கின்றனர். அம்மா இறந்ததை உணர்ந்துகொண்ட கண்ணன் அம்மா என்று கத்தி அழுகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட்.

மேடையில் கண் கலங்கிய அழுத நடிகர்! – ஆறுதல் கூறிய Shakeela

விஷயம் தெரிந்த கண்ணன் சுடுகாட்டுக்கு ஓடுவதற்கும் லட்சுமி அம்மாவிற்கு கொள்ளி வைத்து விடுகின்றனர். இதுகுறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.