மூர்த்தியின் அம்மா லட்சுமி அம்மா மரணமடைந்தது குடும்பத்தாரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Pandian Stores Episode Update 14.09.21 : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் மூர்த்தியின் அம்மா நேற்று தனத்திடம் முற்றிலும் வித்தியாசமாக பேசினார். பதிலுக்கு கனவில் ஏதோ தவறாக தோன்றியது.

சாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு..

மூர்த்தியின் அம்மா மரணம்.. நம்ப மறுக்கும் தனம், கண்ணனுக்கு வந்த சோதனை - பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோட் அப்டேட்.!!

இந்த நிலையில் விடிந்ததும் கதிர் அம்மாவை எழுப்ப சென்று பார்க்கும் போது அவர் மூச்சில்லாமல் கிடந்தார். பின்னர் குடும்பத்தார் எல்லோரும் ஒன்று சேர்ந்து அவரை எழுப்ப முயற்சி செய்தும் அவர் எழுந்திருக்கவில்லை. தனத்தின் அம்மா லட்சுமி அம்மாவை தொட்டுப் பார்த்த போது அவரது உடல் முழுவதும் ஜில்லுனு இருந்தது. அதனால் அவர் உண்மையை புரிந்து கொண்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதை விட ஒரு டாக்டரை கூட்டி வருமாறு கூறினார். தனத்தின் அம்மா பதட்டமடைந்த அதை பார்த்து மீனா புரிந்து கொள்கிறார்.

முல்லை அவங்களுக்கு சுகர் தான் குறைந்திருக்கும் ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போகலாம் என கூறிக் கொண்டிருக்கிறார். பின்னர் ஜீவா டாக்டரை கூட்டி வந்தபோது டாக்டர் அவர் தவறி விட்டதாக கூறினார். அவர் இறந்து மூன்று அல்லது நான்கு மணி நேரம் இருக்கும் என கூறினார்.

இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் அழுது கொண்டிருக்க தனம் அவர் இறந்து விட்டதாகக் கூறியதை நம்பாமல் கத்துகிறார். நேத்து வரைக்கும் நல்லா பேசிட்டு இருந்தாங்க அவங்க இறக்கறதுக்கு வாய்ப்பே இல்லை. எதுக்கு எல்லாரும் அழுதுட்டே இருக்கீங்க ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போகலாம் என கூறுகிறார்.

அனைவரையும் கலாய்த்து தள்ளிய தயாரிப்பாளர் Ravinder Chandrasekar!

பின்னர் கதிர் தனத்தின் கையைப் பிடித்து ஆறுதல் கூறுகிறார். இன்னொருபுறம் கையில் போன் கூட இல்லாமல் கண்ணன் சரக்கு ஏற்றி வருவதற்காக திருச்சி சென்றுள்ளான். அவருக்கு அம்மாவின் மரணம் குறித்த செய்தி எப்படி போய் சேரும்? என தெரியவில்லை.

இத்துடன் முடிகிறது இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் அப்டேட்.