மூர்த்திக்கு கண்ணனுக்காக மீனா செய்த உதவி தெரிய வர அதன் பின்னர் என்ன நடந்தது என்று பார்க்கலாம் வாங்க.

Pandian Stores Episode Update 09.09.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். மீனா சூப்பர் மார்க்கெட்டில் கண்ணனுக்கு வேலை கேட்டதை தொடர்ந்து ஜனார்த்தனன் கண்ணனை கடைக்கு கூப்பிட்டு ஏதேதோ பேசி இருவருக்கும் அதிர்ச்சி கொடுக்கிறார்.

மூர்த்திக்கு தெரிய வரும் கண்ணனுக்கு மீனா செய்த உதவி.. அடுத்து நடந்தது என்ன?? இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் அப்டேட்.!!

அதன் பின்னர் ஜனார்த்தனன் கண்ணனிடம் சூப்பர் மார்க்கெட்டில் வேலை இருக்கு, செய்றியா என கேட்கிறார். உடனே செய்கிறேன் என கூறுகிறார் கண்ணன். அதன்பிறகு காலேஜ் முடிச்சிட்டு 3.15 மணிக்கு கடைக்கு வந்துட்டு 10.30க்கு தான் போகணும் என கூறுகிறார். சம்பளம் 2500 ரூபாயும் தினமும் ரூபாய் 50 தருகிறேன் என கூறுகிறார்.

விநாயகர் எழுதிய மகாபாரதம்.!

பின்னர் ஐஸ்வர்யா எனக்கும் ஒரு வேலை தாங்க என கேட்க அதன் பின்னர் ஜனார்த்தனன் இருவருக்கும் சேர்த்து 5500 ரூபாய் சம்பளம் என கூறுகிறார். வேலை கிடைத்த சந்தோஷத்தில் இருவரும் வீட்டுக்கு செல்கின்றனர்.

நல்ல உணவை சாப்பிட்டால் நோயை வெல்லலாம் – Bigg Boss Aari வேண்டுகோள்..! | Chef Damu | Erode Mahesh | HD

கண்ணனுக்கு வேலை கிடைத்ததை ஜீவா, கதிர், முல்லை என எல்லோரிடமும் மூர்த்தி இருக்கும் போதே ரகசியமாக கூறுகிறார் மீனா. என்னமா ரகசியம் என கேட்க உங்களுக்கு மட்டும் தெரியாது மாமா என உலற அப்போது ஜனார்த்தனன் போன் செய்து கண்ணனுக்கு வேலை கொடுத்ததை பற்றி கூறுகிறார்.

பின்னர் மூர்த்தி மகிழ்ச்சி அடைகிறார். ஆனால் அதனை வெளியில் காட்டி கொள்ளாமல் எல்லாரும் அவனுக்கு சப்போர்ட், என்னமோ பண்ணுங்க என கூறி விட்டு அந்த இடத்தில் இருந்து கிளம்புகிறார்.

பின்னர் உங்க அப்பாவை என் தம்பியை திட்ட கூடாதுனு சொல்லு என ஜீவா மீனாவிடம் கூற அப்போ உங்க கடைல வேலை போட்டு கொடுங்க என கூறுகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய எபிசோட்.