முல்லையை ரவுடிகள் தாக்க குழந்தைக்கு என்னவாகும் என்பதுதான் பாண்டியன் ஸ்டோர் இன் அடுத்த ஹைலைட் என தெரியவந்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் கண்ணன் வீட்டை விட்டு வெளியே அனுப்பப்பட்ட நிலையில் கிரெடிட் கார்ட் வந்த பிரச்சினையை தொடர்ந்து கதிர் கண்ணன் ஐஸ்வர்யாவை வீட்டுக்கு அழைத்து வந்தார்.

இதைத்தொடர்ந்து அடுத்து இந்த சீரியலில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கதிர் மற்றும் முல்லை செக்கப் செல்லும்போது ரவுடிகள் முல்லையை தாக்க வயிற்றில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட குடும்பத்தார் அனைவரும் குழந்தைக்கு என்ன ஆகும் என்ற பதட்டத்தோடு இருக்கின்றனர்.

இறுதியாக முல்லைக்கு நலம் அறிய பிரசவம் நடந்து பெண் குழந்தை பிறப்பது போன்ற காட்சிகள் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. இது எந்த அளவிற்கு உண்மை என்பது ஓரிரு எபிசோடுகளில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.