கண்ணனை மர்ம நபர்கள் அடித்து போட தனத்தால் வீட்டில் பிரச்சனை வெடிக்கவுள்ளது.

Pandian Stores Episode Update 08.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் தன்னுடைய அம்மாவுக்கு உடம்பு சரியில்லாததால் மனமில்லாமல் வீட்டிலிருந்து அவரது வீட்டிற்கு கிளம்புகிறார் தனம். போகும்போது அனைவரிடமும் மழை பெய்துட்டு இருக்கு சுடுதண்ணி வச்சு குளிங்க என கூறுகிறார். மீனாவிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு வந்து விடுகிறேன் என சொல்ல தனத்தின் அண்ணா அதெல்லாம் இல்லை சொல்லிட்டு வா நீ வா போகலாம் என கூறி தனத்தை அழைத்துச் சென்று விடுகிறார். தனம் போகும்போது மூர்த்தி அவரிடம் சீக்கிரம் வந்து விடு என சொல்லி அனுப்பி வைக்கிறார்.

பத்மாவதி தாயார் கோவில் : இன்று பஞ்சமி தீர்த்தம், நாளை புஷ்ப யாகம்v

கண்ணனை அடித்துப் போட்ட மர்ம நபர்கள்.. தனத்தால் வீட்டில் வெடிக்கும் பிரச்சனை - பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய முழு எபிசோட் அப்டேட்

இந்தப் பக்கம் தனத்தின் அம்மா நெஞ்சுவலி வந்தவர் போலவே இல்லாமல் ஒரு சந்தோஷத்தில் இங்குமங்கும் நடந்து கொண்டிருக்கிறார். தனம் வந்ததும் குழந்தைக்கும் அவருக்கும் திருஷ்டி கழிக்கிறார். தனம் உனக்கு நெஞ்சுவலினு சொன்னாங்க ஆனா பாத்தா அப்படி தெரியலையே என கேட்கிறார். பொய் சொல்றீங்களா என கேட்க ஜகா நீ அம்மா நெஞ்சு வலியில் துடித்ததை பார்த்து இருக்கணும். பதறிப்போய் இருப்ப என கூற அதன்பிறகு தனம் இப்போ எப்படிம்மா இருக்கு என கேட்கிறார். லேசா வலி இருந்துட்டு தான் இருக்கு என கூறுகிறார். சரி வா ஹாஸ்பிடலுக்கு போயிட்டு வந்துடலாம் என கூப்பிட 4 மணிக்கு தான் அப்பாயிண்ட்மெண்ட் என சொல்கிறார் தனத்தின் அம்மா. அப்படின்னா சாயங்காலமே வந்து இருக்கேன் வீட்ல எல்லாம் அப்படியே இருக்கு என கூறுகிறார்.

ஜெயில் படம் எப்படி இருக்கு? – Stars Review | Arjun Das, Adhik, Ravi Mariya | G.V.Prakash, Abarnathy

கண்ணனை அடித்துப் போட்ட மர்ம நபர்கள்.. தனத்தால் வீட்டில் வெடிக்கும் பிரச்சனை - பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய முழு எபிசோட் அப்டேட்

நான் உன்னை பார்க்கணும்னு இந்த வலியில் கூட பச்சைத் தண்ணீர் தவிர வேற எதுவும் குடிக்காமல் இருக்கேன் என சொல்கிறார். கயல் பாப்பாவுக்கு வேற பிறந்தநாள் வருது நான் அங்க இருக்கணும் என தனம் கூறுகிறார். மீனாவோட குழந்தைக்கு தானே உன் குழந்தைக்கு இல்லையே அதெல்லாம் அவங்க அப்பா அம்மா பாத்துப்பாங்க என கூறுகிறார். இதனால் கோபமான தனம் கையில் எங்கவீட்டு மூத்த வாரிசு. அவர் பிறந்த நாள் அப்ப நான் இல்லாம இருந்தா எப்படி என கூறுகிறார். ஜகா கொஞ்சம் அம்மாவோட இடத்தில் இருந்து யோசிச்சு பாரு. எனக்கும் என் மாப்பிள்ளையே ஒரு நாள் முழுக்க கொஞ்சணும்னு ஆசை இருக்காதா.? இப்போ மூணு நாள் அவனை முழுசா கொஞ்சிக்கிட்டு இருக்க போகிறேன் என சொல்கிறார்.

அதன்பிறகு ஜகா குழந்தையை வாங்கிக்கொண்டு உள்ளே சென்று விடுகிறார். இந்தப் பக்கம் முல்லை புத்தகம் படித்துக் கொண்டிருக்க மீனா கயல் பாப்பாவோடு வந்து அமர்கிறார். இருவரும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருக்க நீ நான் எங்க நாம மட்டும் பேசிட்டு இருக்கோம் அக்கா எங்க என கேட்கிறார். இங்க நடந்ததெல்லாம் உங்களுக்கு தெரியாது. காமாட்சி பெரியம்மாவுக்கு நெஞ்சுவலி, அதனால ஜகா அண்ணா வந்து அக்காவை கூட்டிட்டு போயிட்டாரு. வாரத்துக்கு மூணு நாள் ஆகுமாம் என சொல்ல மீனா அக்கா அத்தனை நாள் அங்க இருக்க மாட்டார்களே என கூறுகிறார். இல்ல காமாட்சி பெரிமா தனம் அக்கா கூட இருந்தா நல்லா இருக்கும்னு பீல் பண்றாங்க போல அதனால கூட்டிட்டு போயிருக்காங்க என கூறுகிறார். அப்போ அந்த கயல் பிறந்தநாளுக்கு இங்கு இருக்க மாட்டாங்களா என நீமா கேட்கிறார்.

அதுக்குள்ள வந்துடுவாங்க என நினைக்கிறேன் என முல்லை செல்கிறார். உடனே மீனா அவங்க வேணும்னே தான் திட்டம் போட்டு வீட்டுக்கு போயிருக்காங்க. கயல் பிறந்தநாளை வீட்டிலேயே கொண்டாடலாம் என மாமாவும் அக்காவும் மட்டும் பேசி முடிவு பண்ணிட்டாங்க. கயலோட அம்மா என்ற முறையில் ஒரு வார்த்தை கூட என்கிட்ட கேட்கல. இப்போ அக்கா இது எல்லாம் நான் கேட்பேனு வீட்டுக்கு கிளம்பி போய்ட்டாங்க என மீனா தப்பு கணக்கு போடுகிறார். முல்லை அப்படியெல்லாம் இல்லை என சரி போகும் போதாவது என்னை எழுப்பி சொல்லிட்டு போய் இருக்கலாம் என கேட்கிறார். நீங்க தூங்கிட்டு இருந்ததால போன்ல சொல்லிக்கிறேன் என சொல்லிட்டு கிளம்பிட்டாங்க. நீங்க நினைக்கிற மாதிரி இல்ல நீங்க அதிகமா யோசிக்கிறீங்க என கூறுகிறார். இல்ல நான் யோசிக்கிறது தான் சரி என மீனா கூறுகிறார். கயல் பிறந்தநாளுக்கு அக்கா மட்டும் வரலைன்னா இந்த வீட்ல இருக்க எல்லோருக்கும் இருக்கு என மீனா கோபப்படுகிறார்.

இந்த பக்கம் கதிரிடம் அடி வாங்கிய அந்த பையன் கதிர் ஜீவா என இருவரையும் அடிக்க அடியாட்களை கூட்டி வந்துள்ளார். அந்த நேரத்தில் கண்ணன் அந்த வழியாக வர அவங்க ரெண்டு பேரோட தம்பி இவன் தான். இவன் அடிச்சா அவங்களுக்கு வலிக்கும் என கூறுகிறார். அதன்பிறகு கண்ணனை அந்த அடியாட்கள் தாறுமாறாக அடித்து போடுகின்றனர். இந்த பக்கம் கண்ணனுக்காக வாசலில் அமர்ந்து காத்துக் கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா. இத்துடன் இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் முடிவடைகிறது.