மல்லியை லெப்ட் அண்ட் ரைட் வாங்கியுள்ளார் முல்லை.

Pandian Stores Episode Update 08.10.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டார்ஸ். வீட்டுக்கு போன கதிரை அங்கிருந்த மல்லி அசிங்கப்படுத்தி வெளியே அனுப்பினார். அனால் கதிர் அதையெல்லாம் மறைத்து விட்டு முல்லையிடம் அம்மாவை மருத்துவமனைக்கு கூட்டி சென்று வந்ததாக கூறினார். பின்னாடியே வந்த முல்லையின் அப்பா நடந்ததை கூற அதன் பின்னர் முல்லை வீட்டுக்கு சென்று மல்லியை லெப்ட் அண்ட் ரைட் வாங்கினார். அவரை ஏதாச்சும் பேசுனா நான் சும்மா இருக்க மாட்டேன். அவர் வருவாரு அம்மாவை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போவாரு. உன்னால் என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ என கூறினார்.

மல்லியை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய முல்லை.. தனத்திற்கு ஐஸ்வர்யா கொடுத்த அதிர்ச்சி - பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோட் அப்டேட்.!!

அதன் பின்னர் கதிர் எதுக்கு இப்படி பண்ற என முல்லையை திட்ட என்கிட்டே இப்படி டைலாக் எல்லாம் பேசுங்க அங்க எதுக்கு வாயை மூடிட்டு இருந்தீங்க என திட்டினார். பின்னர் வீட்டுக்கு வந்த முல்லை நடந்ததை கூற தனமும் திட்டினார். முல்லை செய்ததது சரி தான் என கூறினார். வீட்டில் அனைவரும் நடந்ததை பற்றி கோபமாக பேசி கொண்டிருக்க கயல் பாபா நடந்ததை பார்த்து அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

பின்னர் கயலின் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாட திட்டம் போட்டனர். இன்னொரு பக்கம் கண்ணன் ஐஸ்வர்யா புது வீட்டுக்கு வாடகைக்கு செல்வதை பற்றி பேசி கொண்டிருக்கின்றனர். ஐஸ்வரியாவுக்கு அந்த வீடு ரொம்ப பிடித்திருப்பதால் அந்த வீட்டுக்கு குடி போகலாம் என முடிவு செய்கிறார் கண்ணன். மறுநாள் காலையில் ஐஸ்வர்யா புது வீட்டில் கோலம் போட்டு கொண்டே பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இருந்து யாரவது வராங்களா என பார்க்கிறார். கொஞ்ச நேரம் கழித்து மீனா வெளியே வருகிறார். எப்படி இருந்த பொண்ணு இப்படி வேலை வாங்குறாங்க என புலம்புகிறார்.

எதிரில் ஐஸ்வர்யா பாட்டு பாடி மீனாவை திரும்பி பார்க்க வைக்கிறார். திரும்பி பார்த்த மீனா ஐஸ்வர்யாவை கண்டு அதிர்ச்சி அடைகிறார். இவ இங்க என்ன பண்ணுறா என யோசிக்கிறார். பின்னர் அதே வேகத்தில் உள்ளே சென்று தனத்திடம் கூறி வெளியே அழைத்து வருகிறார். வெளியே வந்த தனம் ஐஸ்வர்யாவை பார்க்காமல் அவர் போட்ட கோலம் நன்றாக இருப்பதாக கூறுகிறார். பின்னர் ஐஸ்வர்யா முகத்தை பார்த்து தனமும் அதிர்ச்சி அடைகிறார். இவ எதுக்கு இங்க இருக்கா என அதிர்ச்சியாக கேட்கிறார். மீனாவும் தனமும் இது பற்றி பேசி விட்டு தனம் உள்ளே செல்கிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட்.