அம்மாவுக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலி காரணமாக தனம் பாண்டியன் ஸ்டோர் வீட்டிலிருந்து அவரது வீட்டிற்கு கிளம்புகிறார்.

Pandian Stores Episode Update 07.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். ஜீவாவை இடித்து விட்டு சென்ற திருட்டு பையனை கூப்பிட்டு வைத்து பேசும் போது கண்ணன் இன்னைக்கு இல்லனாலும் ஒருநாள் கல்லாவில் கை வைத்து இருப்பான் என சொன்னதும் கதிர் அவருக்கு பளாறென அறை விடுகிறார். அடிவாங்கிய அந்தத் திருட்டு பையன் உங்களைச் சும்மா விடமாட்டேன் என கூறுகிறார்.

உலகத்தரம் வாய்ந்த தொழில் நுட்ப வசதிகள் வழங்கப்படும் : அமித் ஷா உறுதி

அம்மாவுக்கு வந்த திடீர் நெஞ்சுவலி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டை விட்டு கிளம்பும் தனம் - பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோட் அப்டேட்

இந்தப்பக்கம் கஸ்தூரி வீட்டில் அவருடைய மாமியார் அதாவது தனத்தின் அம்மா ஏதோ ஒரு சிந்தனையில் முருங்கைக் கீரைகளை உருவி கீழே போட்டுவிட்டு குச்சிகளை பாத்திரத்தில் போட்டுக் கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் வந்த கஸ்தூரி என்ன அத்தை பண்ணிட்டு இருக்கீங்க, கீரையை எல்லாம் உருவி கீழ போட்டுட்டு இருக்கீங்க அப்படி என்னதான் சிந்தனையில இருக்கீங்க என கேட்கிறார். ‌எல்லாம் தனம் ஞாபகமாக தான் இருக்கு என கூறுகிறார். பச்சைப் புள்ளைய வெச்சிகிட்டு அங்க அவர் என்ன கஷ்டப்படுறாளோ. சீமந்தம் அப்போ அவங்க வீட்ல இருக்காங்க சொல்றத நான் கேட்டிருக்க கூடாது. அடம் பிடிச்சு தனத்தை இங்க கூட்டிட்டு வந்து இருக்கணும் என கூறுகிறார். நடந்து முடிந்ததை இப்போ பேசி என்ன ஆகப் போகிறது என கஸ்தூரி கூறுகிறார். கீரை எல்லாம் குப்பையில போட்டுட்டீங்க இன்னைக்கு வெறும் அப்பளம் தான் என சொல்கிறார்.

இந்த நேரத்தில் தனத்தின் அம்மாவுக்கு திடீரென நெஞ்சுவலி வந்து அவர் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு கத்துகிறார். பதறிப்போன கஸ்தூரி உடனே ஜகாவை அழைத்து தண்ணீர் எடுத்து வர சொல்கிறார். பதறிப்போன ஜகா ஓடிப் போய் தண்ணீர் எடுத்து வந்து கொடுக்கிறார். வாங்க டாக்டர்கிட்ட போயிட்டு வந்துடலாம் என கூப்பிட அவர் வர மறுக்கிறார். இப்போ எதுவும் இல்லை ஆனால் எனக்கு தனம் கூட இருக்கணும் போல இருக்கு. அதுல ஒரு ரெண்டு மூணு நாளைக்கு இங்க வந்து இருக்க சொல்லு. நீ எப்படியாவது அவகிட்ட சொல்லி இங்க கூட்டிட்டு வா என கூறுகிறார். தனம் எப்படிமா வருவார் என ஜகா சொல்லியும் அவ வரவரைக்கும் நான் சாப்பிட மாட்டேன் என்று கூறுகிறார்.

Ajith சாரை Thala-ன்னு சொல்லுறது சரியா..தவறா? – நடிகை Sanam Shetty-யின் பதில்

இதனால் வேறு வழியில்லாமல் ஜகா மூர்த்தியை ஒரு இடத்திற்கு தனியாக வர வைத்து அவரிடம் நடந்த விஷயத்தை கூறுகிறார். முதலில் பதறிப்போன மூர்த்தி அத்தை இப்போ எப்படி இருக்காங்க என கேட்கிறார். இப்போ பரவால்ல நல்லா இருக்காங்க ஆனா தனத்தை பார்க்கணும்னு சொல்றாங்க என சொன்னதும் சரி நான் தனத்தை கூட்டிட்டு வந்து அத்தையை பார்க்கிறேன் என சொல்கிறார். அவங்க தனம் ரெண்டு மூணு நாளைக்கு அவங்க கூட இருக்கணும்னு நினைக்கிறாங்க என சொல்ல ரெண்டு மூணு நாளைக்கு அது எப்படி முடியும் என மூர்த்தி கேட்கிறார். ஒருவழியாக ஜகா மூர்த்திக்கு விஷயத்தை எடுத்துச் சொல்லி புரிய வைக்கிறார். எனக்கு சரிதான் ஆனா தனம் என்ன சொல்லுவானு தெரியலையே என கேட்கிறார். சரி வா வீட்டுக்கு போகலாம் என கூறுகிறார்.

அம்மாவுக்கு வந்த திடீர் நெஞ்சுவலி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டை விட்டு கிளம்பும் தனம் - பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோட் அப்டேட்

வீட்டில் தனம் மற்றும் முல்லை ஆகியோர் குழந்தையை வைத்து கொஞ்சிட்டு இருக்கும் நேரத்தில் மூர்த்தியும் ஜகாவும் உள்ளே வருகின்றனர். முதலில் அனைவரிடமும் ஜகா நலம் விசாரித்தார் வீட்டில் உள்ளவர்களும் அவரிடம் நலம் விசாரிக்கின்றனர். பிறகு அம்மாவுக்கு நெஞ்சுவலி என சொன்னதும் தனம் அதிர்ச்சி அடைகிறார். அம்மா நீ அவங்க கூட ரெண்டு நாள் இருக்கணும்னு ஆசைப்படுறாங்க என சொல்ல மூர்த்தியும் போயிட்டு வா என கூறுகிறார். என்ன மாமா நீங்களும் போயிட்டு வாங்க சொல்றீங்க எனக்கு கஷ்டமா இருக்கு என கூறுகிறார்.

கதிர் நீங்க போயிட்டு நைட்டு வந்துடுங்க காலையில நானே உங்கள கூட்டிட்டு போறேன். நீங்க எவ்வளவு நேரம் அங்கே இருக்கணும்னு ஆசைப்படுறீங்களோ அவ்வளவு நேரம் இருங்க என பதில் கூறுகிறார். மூர்த்தி அது அவளுக்கும் சரியா இருக்காது அந்த வீட்ல இருக்கவங்களுக்கும் உங்களுக்கு சரியாக இருக்காது என கூறுகிறார்.

அதன்பிறகு ஜகா முல்லையிடம் நீ போயிட்டு ரெண்டு பேருக்கு துணி எடுத்துட்டு வாமா என சொல்லி அவரை அனுப்பி வைக்கிறார். அதற்குள் நான் ஒரு போன் பேசிட்டு வரேன் என வெளியே செல்கிறார். தனம் எப்படி போகிறது என சிந்தனையில் இருக்க இத்துடன் இன்றைய பாண்டியன் ஸ்டோர் எபிசோட் முடிகிறது.

இதனைத் தொடர்ந்து வெளியான ப்ரோமோ வீடியோவில் கதிர் அறைந்த கோபத்தில் இந்த திருட்டு பையன் ஆட்களை வைத்து கண்ணனை அடித்து போடுகிறார். அடுத்து என்ன நடக்கிறது என்பதை நாளை பார்க்கலாம்.