தனத்தின் அம்மாவால் வீட்டில் பிரச்சனை வெடித்துள்ளது. மீனா கண்டபடி பேசி விடுகிறார்.

Pandian Stores Episode Update 02.11.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்.மீனா தன்னுடைய அப்பாவுடன் வீட்டிற்கு வர தனம் குழந்தைக்கு பால் கொடுக்க உள்ளே சென்றார். அவருடைய அம்மா பின்பக்கம் யாரோ கூப்பிட அவர் அங்கே சென்ற நேரத்தில் கயல் பாப்பா அழ தொடங்குகிறது. உள்ளே வந்த மீனா கயல் பாப்பாவை தூக்குகிறார். தனம் உள்ளே இருந்து வெளியே வர உங்களால கயலை பார்த்துக்க முடியாதுனா என்கிட்ட சொல்லி இருக்கலாம்ல நானே தூக்கிட்டு போய் இருப்பேன்ல. இப்படி அநாதை மாதிரி அழ வச்சிட்டு இருக்கீங்க என கூறுகிறார். உடனே தனம் அம்மா நான் கயலை பார்த்துக்க சொல்லிட்டு தானே போனேன் என சொல்ல ஆள் நகர்ந்தாலே இவ அழ ஆரம்பிச்சிடுற அதுக்கு நான் என்ன பண்ண முடியும். அவ தான் பைத்தியக்காரி மாதிரி வந்து காத்திக்கிட்டு இருக்கா நீயும் கத்துற என சொல்ல மீனாவின் அப்பா உடனே வார்த்தையை அளந்து பேசுங்க என சத்தம் போடுகிறார்.

அம்மாவை உள்ளே அனுப்பி விட்டு தனம் மீனாவிடம் பேச இப்போயெல்லாம் கயலை வேற மாதிரி பாக்குறீங்க, இவை உங்களுக்கு முக்கியமா தெரியல என சொல்லிட்டு அப்பாவை கூட்டி கொண்டு ரூமிற்கு செல்கிறார். ரூமில் அவருடைய அப்பா மீனாவிடம் நீ எதுக்கு இப்படி கஷ்டப்ட்டுட்டு இருக்க என சொல்கிறார். நீ அவங்க பேரனுக்கு மருந்து வாங்க போனேன், இங்க உன் குழந்தை கண்டுக்க யாரும் இல்லாமல் கிடக்கு என பேசுகிறார். நம்ம வீட்டுக்கு வந்துடு என கூறுகிறார். இதெல்லாம் ஒரு வாழ்க்கையா? உனக்கு இங்க மரியாதையே இல்ல, வேலைக்காரி மாதிரி வேலை செஞ்சிட்டு இருக்க. உனக்கு மாப்பிள்ளைக்கும் என்ன லாபம் இருக்கு? நீதான் யோசிக்கணும் என கூறுகிறார். இந்த வீட்டை இன்னைக்கு வித்தா கூட 10 லட்சத்துக்கு கூட தேறாது. இங்க எதுவுமே இல்ல, ஏன் இங்க இருக்கணும், நல்லா யோசி என மீனாவின் மனசை கெடுத்து விடுகிறார்.

ஆதிகேசவப் பெருமாள் கோவில், 10 நாள் திருவிழா இன்று தொடக்கம்

தனத்தின் அம்மாவால் வீட்டில் வெடித்த பிரச்சனை - பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய முழு எபிசோட் அப்டேட்

தனம், முல்லை, தனத்தின் அம்மா ஆகியோர் மீனா பிரச்சனை பற்றி பேசி கொண்டிருக்கின்றனர். மீனா நன்றி கெட்டவ என மீனாவை திட்டி கொண்டிருக்கிறார் தனத்தின் அம்மா. உன் வாழ்க்கையை பாருனு சொன்னா கேட்டா தானே என சொல்கிறார். குழந்தை விசயத்தில் மீனா பேசியது தனக்கு வருத்தமாக இருப்பதாக தனம் கூறுகிறார். இந்த வீட்டில ஏதோ தப்பா நடக்க ஆரம்பிச்சிடுச்சு என தனம் புலம்புகிறார். சின்ன சின்ன விசியம் கூட பெரிய பிரச்னையாகுது என சொல்கிறார்.

செம Jolly ஆக கலாய்த்த Karu Pazhaniappan – மேடையில் விழுந்து விழுந்து சிரித்த MP.Kanimozhi

தனம் மற்றும் மீனா இருவரும் அமர்ந்திருக்க அந்த நேரத்தில் மீனா வர முல்லை மீனாவிடம் ஏன் அப்படி பேசினீங்க என கேட்க இந்த வீட்ல நான் பேசுனா தான் தப்பு என சொல்கிறார். இந்த வீட்ல உனக்கு என்ன பிரச்சனைனு என்கிட்டே பேசு, சண்டை போடு, நான் வேணான்னு சொல்லல என தனம் சொல்கிறார். நீ ஏதோதோ பேசிட்டே, நான் கயலை வேறயா நினைக்கல, எனக்கு ரெண்டு குழந்தையும் ஒன்னு தான். இனிமே குழந்தைங்க விசியத்துல இப்படி பேசாத என சொல்கிறார் தனம். மீனா கோவத்துல ஏதோ பேசிட்டேன் என முல்லையிடம் கூறுகிறார்.

இரவு வீட்டில் அனைவரும் அமர்ந்து குழந்தைக்கு பெயர் வைக்கும் விழா குறித்து பேசி கொள்கின்றனர். சின்ன வயசுல ருசிச்சு சாப்பிடுறவன் இவன் தான் என கதிரை பற்றி ஜீவா சொல்கிறார். தனம் மீனா, முல்லை வீட்டுல சொல்லியாச்சா என கேட்கிறார். இந்த நேரத்தில் மீனா வந்து அமர முல்லையின் அம்மா எழுந்து உள்ளே செல்கிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட்.