Pandian Stores Chitra Engagement
Pandian Stores Chitra Engagement

பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ராவுக்கு விரைவில் திருமணம். நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Pandian Stores Chitra Engagement : தமிழ் சின்னத்திரையில் சீரியல் நடிகையாகவும் தொகுப்பாளினியாக வலம் வருபவர் சித்ரா. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலின் மூலமாக மிகவும் புகழ் பெற்றுள்ளார்.

இந்த சீரியலில் இவருக்காகவே தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வருவதாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது அவர் தனக்கான மாப்பிள்ளையை தேர்வு செய்துள்ளார். இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆம், ஹேமந்த் என்ற தொழிலதிபர் ஒருவரை சித்ரா திருமணம் செய்து கொள்ள உள்ளார். விரைவில் இது குறித்த அறிவிப்பை அவர் வெளியிடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.