Pandian Stores Chitra Engagement Video
Pandian Stores Chitra Engagement Video

நிச்சயதார்த்தத்தில் வருங்கால கணவருக்கு பாண்டியன் சித்ரா கொடுத்த சர்ப்ரைஸ் குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.

Pandian Stores Chitra Engagement Video : தமிழ் சின்னத்திரையில் மக்கள் தொலைக்காட்சி மூலமாக தொகுப்பாளினியாக பயணத்தை தொடங்கியவர் சித்ரா.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பல சின்னத்திரை தொலைக்காட்சியில் பணிபுரிந்தார். மேலும் இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவருக்கு ஹேமந்த் என்ற தொழில் அதிபர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இவர்களின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

விஜய் ரசிகரின் இயக்கத்தில் பாண்டியன் ஸ்டோர் கதிர் நடித்துள்ள குறும்படம் – பட்டைய கிளப்பும் போஸ்டர், தெறிக்க விட்டு கொண்டாடும் விஜய் ரசிகர்கள்!(Opens in a new browser tab)

இப்படியான நிலையில் நிச்சயதார்த்தத்தில் தன்னுடைய வருங்கால கணவருக்கு சப்ரைஸ் ஒன்றை கொடுத்துள்ளார். அதாவது ஒரு ரெட் கலர் பெட்டிக்குள் ஹார்ட் பலூன்களை அடக்கி வைத்து மாப்பிள்ளை அதை திறக்க வைத்து பறக்க வைத்துள்ளார்.

இந்த வீடியோவை சித்ராவின் ரசிகர் ஒருவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட சமூக வலைதளங்களில் தீயாக பரவி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.