Pandian Stores VJ.Chithra
Pandian Stores VJ.Chithra

நிச்சயதார்த்த புடவையில் வளைத்து வளைத்து போட்டோ ஷுட் நடத்தியுள்ளார் பாண்டியன் ஸ்டோர் சித்ரா.

Pandian Stores Chithra Photoshoot Photos : தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பயணத்தைத் தொடங்கி இன்று சீரியல் நடிகையாக வலம் வருபவர் விஜே சித்ரா. இவர் பணிபுரிந்த டிவி சேனல்களே இல்லை என்று கூடச் சொல்லலாம்.

தற்போது சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் உள்ள என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த சீரியலின் மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மனதில் முல்லையாக நீங்காத இடம் பிடித்துள்ளார்.

இவருக்கு சில தினங்களுக்கு முன்னர் தொழிலதிபர் ஒருவருடன் கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

இதனையடுத்து தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிச்சயதார்த்த புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து போட்டோ ஷுட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.