Pandian Stores Chithra Last Video

சித்ரா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் குமரன் சேர்ந்து அடித்த லூட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Pandian Stores Chithra Last Video : தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக சீரியல் நடிகையாக வலம் வந்தவர் சித்ரா. பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்.

இந்த நிலையில் இவர் தன்னுடைய கணவருடன் ஏற்பட்ட தொடர் பிரச்சனை மற்றும் மன அழுத்தம் காரணமாக ஹோட்டல் ஒன்றில் கடந்த வாரம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஸ்டார்ட் மியூசிக் என்ற நிகழ்ச்சியில் ஷூட்டிங்கில் பங்கேற்க உள்ளார். பாண்டியன் ஸ்டோர் குழுவுடன் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் குமரனுடன் சேர்ந்து செம லூட்டி அடித்துள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கண்கலங்க வைத்துள்ளது. சித்ராவுக்கு உள்ள இவ்வளவு திறமை இருக்கு.. ஆனா அவங்க இப்போ நம்மோடு இல்லை என பலரும் உருக்கமாக கமெண்டகளை பதிவிட்டுள்ளனர்.

இதோ அந்த வீடியோ