தனது மார்பகத்தில் கட்டி வளர்ந்துள்ளதால் அறுவை சிகிச்சை  செய்திருக்கும் பாண்டியன் ஸ்டோர் மீனா. இதனைக் குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியலில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர். மக்கள் மனதை கவர்ந்து உள்ள இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் நம்பர் 1 இடத்தில் உள்ளது. இந்த சீரியலில் மீனா என்னும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் ஹேமா ராஜ்குமார்.

மார்பகத்தில் ஆபரேஷன்.. புற்றுநோய் காரணமா? பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா வெளியிட்ட ஷாக் தகவல்.

இவர் பல சீரியல்களில் நடித்து இருந்தாலும் இவர் பிரபலமானது இந்த பாண்டியன் ஸ்டோர் சீரியல் தான். இதில் இவர் கணவரையும் தந்தையையும் விட்டுக் கொடுக்காமல் நடுவில் இருந்து சமாளித்துக் கொண்டிருக்கும் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதனை தொடர்ந்து யூடியூபில் ‘ஹேமாஸ் டைரி’ என்ற ஒரு சேனலையும் நடத்திக் கொண்டிருக்கிறார் அதில் அவ்வப்போது தனது வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டிருப்பார். அதேபோல் தற்போது உடல்நலம் சரியில்லாத வீடியோவையும் பகிர்ந்து உள்ளார்.

மார்பகத்தில் ஆபரேஷன்.. புற்றுநோய் காரணமா? பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா வெளியிட்ட ஷாக் தகவல்.

அதாவது தனது  மார்பகத்தில் கட்டி இருப்பதாக மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதற்கு அறுவை சிகிச்சை செய்யும் படி மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளார்கள் இதனால்  பயந்து போன ஹேமா ராஜ்குமார் அவர்கள் தனது குடும்பத்தாருடன் கலந்து பேசி அறுவை சிகிச்சை செய்துள்ளார். அதன்பின் பெண்கள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை படுத்தி  வீடியோ ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் மிகவும் வருத்தம் அடைந்துள்ளனர்.