Pandian Stores Meena

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா மாடர்ன் உடையில் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் திடீர் ட்ரெண்ட் ஆகியுள்ளன.

Pandia Stores Hema Modern Photoshoot : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டுக் குடும்ப கதையை பற்றி பேசும் சீரியல் என்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த சீரியலில் மூன்று நாயகிகளில் ஒருவராக நடித்து வருபவர் ஹேமா சதீஷ். இவர் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவருக்கு சீரியல் மற்றும் நிஜம் என இரண்டிலும் குழந்தை பிறந்திருந்தது.

பிரசவத்திற்கு பிறகு சீரியலில் நடிக்காமல் ஓய்வெடுத்து வருகிறார். அவர் விரைவில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது ஹேமா மாடர்ன் உடையில் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

https://www.instagram.com/p/B_eXmiOgmqj/?igshid=xt9afltbjo4w
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.