பல வருடங்கள் கழித்து கர்ப்பமாகி உள்ளார் சன் டிவி சீரியல் நடிகை அனு.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெல்லத் திறந்தது கதவு என்ற சீரியல் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அனு. இன்னும் புரியும்படி சொல்ல போனால் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டவர் இல்லம் சீரியலில் ரோஷினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

பல வருடங்கள் கழித்து கர்ப்பமான சன் டிவி சீரியல் நடிகை.. வைரலாகும் வளைகாப்பு புகைப்படங்கள்

மெல்ல திறந்தது கதவு சீரியலில் முரட்டு வில்லியாக காட்டப்பட்ட இவரை ரசிகர்கள் பலரும் திட்டி தீர்த்து வந்தனர். ஆனால் நிஜ வாழ்க்கையில் இவர் அப்படியே வேற மாதிரி குழந்தை போல ஜாலியான மனிதர் என தெரிய வந்தது.

பாண்டவர் இல்லம் சீரியலில் முதலில் நெகட்டிவ் வேடத்தில் நடித்த இவர் தற்போது பாசிட்டிவ் வேடத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். பல வருடங்களுக்கு முன்னர் விக்னேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் தற்போது கர்ப்பமாக இருந்து வருகிறார். அதற்கேற்றார் போல பாண்டவர் இல்லம் சீரியலிலும் கர்ப்பமாகவே இருந்து வருகிறார்.

பல வருடங்கள் கழித்து கர்ப்பமான சன் டிவி சீரியல் நடிகை.. வைரலாகும் வளைகாப்பு புகைப்படங்கள்

இந்த நேரத்தில் தற்போது இவர் தன்னுடைய ஐந்து மாத வளைகாப்பு புகைப்படங்களை சமூக வளையதளத்தில் வெளியிட அது இணையத்தில் வைரலாக்கி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.