Money Rain

☆ நம்முடைய வீட்டில் எவ்வளவு தான் சேமித்து வைத்தாலும் செல்வம் தங்குவதில்லை என்று வருத்தப்படுகிறீர்களா? கவலைப்படாதீங்க… அதற்கும் சில பரிகாரங்கள் உண்டு.

☆ இந்த பரிகாரங்களை எல்லா நாள்களிலும் செய்யலாம். இதற்கென தனியே கால நேரம் பார்க்கத் தேவையில்லை. ஆனால் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் 9 மணி இடைவெளியில் இதைச் செய்தால் பலன் இரட்டிப்பாகும்.

செய்முறை பரிகாரம்:
☆ ஒரு சிறிய வெள்ளி அல்லது கண்ணாடி கின்னத்தை எடுத்துக் கொண்டு அதில் உப்பு, சர்க்கரை, அரிசி மூன்றையும் சமஅளவு எடுத்துக் கொண்டு அதற்கு நடுவில் ஒரு குத்தூசியை (safty pin) ஒன்றை மேல்நோக்கி இருக்கும்படி குத்தி வைக்க வேண்டும்.

☆ இதை அப்படியே கையில் ஏந்திக் கொண்டு, தங்களுடைய விருப்பக் கடவுளிடம் மனதைவிட்டு, துன்பங்களைப் போக்குமாறும் செல்வ வளம் தரும்படியும் வேண்டிக்கொண்டு, பின் அந்த கின்னத்தை மூடாமல், திறந்திருக்கும்படி வீட்டின் ஏதேனும் ஒரு மறைவான மூலையில் வைக்க வேண்டும்.

☆ தென்மேற்கு மூலையில் கிழக்கு நோக்கியும், வடகிழக்கு மூலையில் மேற்கு நோக்கியும் வைத்தால் பலன் இரட்டிப்பாகும்.

☆ இதை தினமும் 2 நிமிடமாவது தொட்டு வணங்கிக் கொள்ள வேண்டும். இதை தினமும் செய்து வந்தால், அன்றாடம் உங்கள் வீட்டுப் பொருளாதாரத்தில் நல்ல மாற்றம் உண்டாவதை உங்களால் உணர்ந்து கொள்ள முடியும்.

☆ அந்த கின்னத்தில் தூசி படிந்தபின், அதை மாற்றிவிட்டு அதேபோல் வேறு ஒரு கின்னத்தை வைத்து வழிபட ஆரம்பிக்கலாம். இதை இத்தனை நாள் தான் செய்ய வேண்டும் என்றில்லை. வாழ்நாள் முழுவதும் கூட இதை கடைபிடிக்கலாம்.

☆ இவ்வாறு செய்து வருவதால் வீட்டில் வளமும் செல்வமும் அதிகரிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here