Pana Pulakkam Athigarikka

(1) பணப்புழக்கம் அதிகரிக்க: பணப்புழக்கம் அதிகரிக்க, பச்சை நிற துணியில் சிறிது பச்சை கற்பூரம், ஏலக்காய், சோம்பு மூன்றையும் சேர்த்து முடிச்சு போட்டு பணப்பெட்டியில் வைக்கவும். சிறிதளவு போதுமானது. பணப்புழக்கம் அதிகரிப்பதை நீங்களே கண்கூடாக காணலாம்.

(2) இழந்தவை அனைத்தையும் திரும்ப பெற பரிகாரம்:
ஒரு புதிய வெள்ளைத் துணியில் 27 மிளகுகள் கட்டி, அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி, கால பைரவருக்கு விளக்கு ஏற்றி வர வேண்டும். இவ்வாறு செய்தால் நாம் நினைத்தது அனைத்தும் நடக்கும். இழந்த பொருட்கள் அனைத்தும் திரும்ப வரும். வளர்பிறை /தேய்பிறை அஷ்டமியில் செய்தால் உடனடியாக பலன் கிடைக்கும்.

(3) பணம் தொடர்ந்து சேர பரிகாரங்கள்: ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் காலை 6 மணிமுதல் 7 மணிக்குள் சுக்ர ஓரையில் குளித்து, பூஜைகள் செய்து, அருகில் உள்ள மளிகை கடை சென்று மஹாலக்ஷ்மியை வேண்டி கொண்டு கல் உப்பு வாங்கி பாத்திரத்தில் போடவேண்டும். இதை ஒவ்வொரு வாரமும் செய்து வர வீட்டில் மஹாலக்ஷ்மி விரைவில் வந்து குடி புகுவாள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here