Palakkaai Thokku
Palakkaai Thokku

Palakkaai Thokku :

தேவையான பொருட்கள் :

1. பலா காய் – 1 கப்

2. வெங்காயம் – 4

3. தக்காளி – 2

4. பச்சை மிளகாய் – 2

5. கறிவேப்பிலை – சிறிது

6. மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்

7. மிளகாய் தூள் – 2 ஸ்பூன்

8. தானிய தூள் – 2 ஸ்பூன்

9. இஞ்சி – சிறிது

10. பூண்டு – 8 பல்

11. கொத்துமல்லி – சிறிது

12. நல்லெண்ணெய், உப்பு – தேவைக்கு

செய்முறை :

காய்ந்த மிளகாய், தனியா,பட்டை,கிராம்பு, ஏலக்காய்-2, சோம்பு,மராத்தி மொக்கு, அன்னாச்சிபூ-2,முந்திரி,தேங்காய் துருவல் ஒரு கப்,மிளகு,கறிவேப்பிலை இவை அனைத்தும் 2 ஸ்பூன் அளவிற்கு சேர்த்து வானலில் கொஞ்சம் எண்ணெய் விட்டு லேசாக வறுத்து பின் மிக்ஸியில் தண்ணீர் கொஞ்சம் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

பிறகு, ஒரு பாத்திரதில் பாலா பழ பிஞ்சுகளை சிறிய துண்டுகளாக, மஞ்சள் தூள் மற்றும் தேவைக்கு உப்பு சேர்த்து வெக வைத்து கொள்ள வேண்டும்.

பின் வாணலில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் சோம்பு தாளித்து அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

அதனுடன், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். பிறகு இதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள்,சிறிது உப்பு (பாலா பழத்தில் உப்பு சேர்க்கப்பட்டு உள்ளதால் சிறுது போதுமானது) மற்றும் நறுக்கிய தக்காளி சேர்த்து மீண்டும் வதக்கவும்.

மசாலா நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள மசாலாவை இதில் சேர்த்து கிளக்கி பின் வெக வைத்துள்ள பாலா பழத்தை சேர்த்து அடி பிடிக்காமல் கிளற வேண்டும்.

பிறகு கொத்துமல்லி தூவி இறக்கினால் சூடான சுவையான பாலா தோக்கு தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here