Pakkiri Movie Review : : Dhanush, Erin Moriarty, The Extraordinary Journey of the Fakir, Kollywood , Tamil Cinema, Latest Cinema Review

தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் படமான The Extraordinary Journey of the Fakir என்ற திரைப்படம் தமிழில் பக்கிரி என்ற பெயரில் தமிழில் டப்பிங் படமாக வெளியாகியுள்ளது. அந்த படம் எப்படி இருக்குனு பார்க்கலாம் வாங்க.

Pakkiri Movie Review :

கனட நாட்டு இயக்குனரான கென் ஸ்காட் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் திரைப்படம் தான் The Extraordinary Journey of the Fakir. கடந்த மே மாதம் வெளியான இந்த படம் தற்போது தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.

படத்தின் கதைக்களம் :

மும்பையில் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவரான தனுஷ் தன்னுடைய அப்பா யாரென்றே தெரியாமல் வசித்து வருகிறார். அவருடைய அம்மா லாண்டரி துணிகளை வெளுக்கும் வேலையை செய்து வருகிறார்.

அவருடைய அம்மாவின் இறப்பிற்கு பிறகு திடீரென அவருடைய அப்பா என்ற பெயரில் பிரான்சில் இருந்து ஒரு கடிதம் வருகிறது.

அதன் பின்னர் தன்னுடைய அப்பாவை பார்க்க கையில் காசு கூட இல்லாமல் பிரான்ஸ் கிளம்புகிறார். பிரான்சின் தலைநகரான பாரிஸில் ஒரு பெண்ணுடன் காதல் ஏற்படுகிறது, பின்னர் இருவரும் பிரிந்து விடுகின்றனர்.

மேலும் தனுஷ் நாடு நாடாக சுற்ற வேண்டிய சூழல் உருவாகி விடுகிறது. இதையெல்லாம் தாண்டி தன்னுடைய அப்பாவுடன் சேர்ந்தாரா இல்லையா? காதலியை கரம் பிடித்தாரா இல்லையா? என்பது தான் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல் :

நடிப்பு :

தனுஷின் எதார்த்தமான நடிப்பு, அப்பாவியான முக பாவனை என ஹாலிவுட் படத்திலும் அம்சமாக நடித்து நம்மை கவர்ந்ந்து இழுத்துள்ளார்.

எமோஷனல், காதல், செண்டிமெண்ட் என அனைத்திலும் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி கை தட்டல்களை வாங்கி குவிக்கிறார்.

அந்த மாதிரி படம் பார்த்திருக்கிறீர்களா? பிரியா பவானி ஷங்கரின் அதிர்ச்சி பதில்.!

தனுஷ் மட்டுமில்லாமல் படத்தில் நடித்துள்ள சிறு சிறு கேரக்டர்கள் கூட நம்மை ரசிக்க வைக்கின்றன.

தொழில்நுட்பம் :

ஹாலிவுட் படம் என்றால் அதன் இசை, ஒளிப்பதிவுகளை சொல்லவா வேண்டும்.. அத்தனையும் அற்புதமாக அமைந்துள்ளது.

டப்பிங் :

ஹாலிவுட் படத்தின் டப்பிங் படம் என்றாலும் துளி கூட டப்பிங் போல தெரியவே இல்லை, அந்த அளவிற்கு திறமையாக படத்தை தமிழில் கொடுத்துள்ளனர்.

இயக்கம் :

கனட இயக்குனராக இருந்தாலும் மும்பையை மையமாக கொண்டு ஒரு ஏழ்மையான குடும்பத்தின் கதையை அழகாக விவரித்துள்ளார் இயக்குனர். குடும்பம், காதல், அகதிகளின் வாழ்க்கை என அனைத்தையும் சிறப்பான திரைக்கதை மூலம் நம்மை நெகிழ வைத்துள்ளார்.

தம்ப்ஸ் அப் :

படத்தின் கதைக்களம்

குடும்ப கதையில் தொடங்கி காதல் கதையாகி இறுதியுள் அகதிகளை பேசிய விதம் அருமை.

தனுஷின் அசத்தலான நடிப்பு

தம்ப்ஸ் டவுன் :

பெரிய அளவில் குறைகள் என சொல்வதிற்கில்லை.

REVIEW OVERVIEW
பக்கிரி விமர்சனம்
Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.
pakkiri-movie-reviewமொத்தத்தில் பக்கிரி முற்றிலும் மாறுபட்ட வித்தியாசமான கதை, குடும்பத்துடன் சேர்ந்து பார்க்க ஏற்ற படம்.