Pakistan Won The match : Sports News, World Cup 2019, Latest Sports News, World Cup Match, India, Sports, Latest News,  Pakistan

 Pakistan Won The match :

நியூசிலாந்துக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் பாபர் ஆஸம் சதம் கடந்து கைகொடுக்க, பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ‘வேகத்தில்’ மிரட்டிய ஷஹீன் அப்ரிதி, 3 விக்கெட் கைப்பற்றினார்.

இங்கிலாந்தில், 12வது ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. பர்மிங்காமில் நடந்த லீக் போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதின. இரு அணிகளிலும் மாற்றம் செய்யப்படவில்லை.

மழையால் போட்டி ஒரு மணி நேரம் தாமதமாக துவங்கியது. ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

அதை அடுத்து நியூசிலாந்து அணிக்கு மார்டின் கப்டில் மற்றும் கோலின் முன்ரோ ஜோடி துவக்கம் அதிர்ச்சி தந்தது. ஷஹீன் அப்ரிதி பந்தில் ராஸ் டெய்லர் , டாம் லதாம் இருவரும் மோசமாக வெளியேறினர்.

ஷதாப் கான் ‘சுழலில்’ வில்லியம்சன் 41 ரன் எடுத்து வெளியேறினார் . பின் இணைந்த ஜேம்ஸ் நீஷம், கோலின் டி கிராண்ட்ஹோம் ஜோடி பாகிஸ்தான் பந்துவீச்சை எளிதாக சமாளித்து அரைசதம் கடந்தனர்.

இவர்கள், ஆமிர் வீசிய 47வது ஓவரில், ஒரு சிக்சர், 2 பவுண்டரி விளாச, அதிகபட்சமாக 18 ரன் கிடைத்தது. ஆறாவது விக்கெட்டுக்கு 132 ரன் சேர்த்த போது கிராண்ட்ஹோம் (64) ‘ரன்-அவுட்’ ஆனார்.

நியூசிலாந்து அணி 50 ஓவரில், 6 விக்கெட்டுக்கு, 237 ரன்கள் எடுத்தது. நீஷம் (97), மிட்சல் சான்ட்னர் (5) அவுட்டாகாமல் இருந்தனர். பாகிஸ்தான் சார்பில் ஷஹீன் அப்ரிதி, 3 விக்கெட் வீழ்த்தினார்.

இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணிக்கு நியுசிலாந்து அணியின் துவக்கம் போலவே பகார் ஜமான் மற்றும் இமாம் உல் ஹக் ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. முகமது ஹபீஸ் (32) ஓரளவு கைகொடுத்தார்.

அபாரமாக ஆடிய பாபர் ஆஸம், வில்லியம்சன், சான்ட்னர் ஓவரில் தலா 2 பவுண்டரி விளாசினார். மறுமுனையில் ஒத்துழைப்பு தந்த ஹாரிஸ் சோகைல், பவுல்ட், சான்ட்னர் பந்தில் தலா ஒரு சிக்சர் பறக்கவிட்டார். பொறுப்பாக ஆடிய இவர், தன்பங்கிற்கு அரைசதமடித்தார்.

பெங்களூர் அணி தோல்வி- பந்துவீச்சாளர்கள் மீது கோலி கடும் பாய்ச்சல்

நியூசிலாந்து பந்துவீச்சை எளிதாக சமாளித்த பாபர், சதமடித்தார். நான்காவது விக்கெட்டுக்கு 126 ரன் சேர்த்த போது ஹாரிஸ் சோகைல் (68) ‘ரன்-அவுட்’ ஆனார். பெர்குசன் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய கேப்டன் சர்பராஸ் அகமது வெற்றியை உறுதி செய்தார்.

பாகிஸ்தான் அணி 49.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 241 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பாபர் ஆஸம் (101), சர்பராஸ் அகமது (5) அவுட்டாகாமல் இருந்தனர். இதன்மூலம் பாகிஸ்தான் அணி, அரையிறுதிக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது. ஆட்ட நாயகன் விருதை பாபர் ஆஸம் வென்றார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.