Pakistan Stills
Pakistan Stills

Pakistan Stills – காஷ்மீரின் புல்வாமா பகுதியில்பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40சி.ஆர்.பி.எப்., வீரர்கள்மரணமடைந்தனர்.

இந்த தாக்குலுக்கு பாக்கிஸ்தான் தீவிரவாத அமைப்பு பொறுப்பு ஏற்று உள்ளது. இதனை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் மைதானங்களில் பாகிஸ்தான் வீரர்கள் படங்கள் அகற்றி தங்களின் கண்டனத்தை வெளிப்படுத்தியது.

இதனை தொடர்ந்து பாகிஸ்தான் வீரர்களின் படங்களை அகற்றியது வருந்தத்தக்கது. இதுகுறித்து ஐ.சி.சி.,யிடம் முறையிடுவோம்,’ என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்தது.

இதனால் பாகிஸ்தானை உலக அரங்கில் இருந்து தனிமைப்படுத்தும் வேலைகளில் இந்தியா ஈடுபட்டுள்ளது.

தவிர மும்பை கிரிக்கெட் கிளப் ‘ரெஸ்டாரண்ட்’ பகுதியில் சுவற்றில் இருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன், தற்போதைய பிரதமர் இம்ரான் கானின் போட்டோவை, திரையிட்டு மறைத்தனர்.

இதேபோல பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தின் மொகாலி மைதானத்தில் இருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் படங்களை அகற்றியது.

இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மானேஜிங் இயங்குவர் வாசிம் கான் கூறுகையில்,’ விளையாட்டு, அரசியல் இரண்டையும் எப்போதும் தனித்தனியாக பார்க்க வேண்டும்.

இரு நாடுகள், மக்களுக்கு இடையே முக்கிய பாலமாக திகழ்வது விளையாட்டு தான். இதில் கிரிக்கெட்டுக்கு அதிக பங்குள்ளது. பிரதமர், முன்னாள் சாதனையாளர்கள் படங்களை வரலாற்று சிறப்பு வாய்ந்த மைதானங்களில் இருந்து அகற்றும் செயல் மிகவும் வருந்தத்தக்கது.

இதுகுறித்து பிப். 28ல் துபாயில் நடக்கவுள்ள கூட்டத்தில் முறையிடுவோம்,” என்றார்.