Paiyaa Movie Secrets
Paiyaa Movie Secrets

பையா பட ஷூட்டிங்கின் போது கேரவன் இல்லாததால் தமன்னா குறித்த ரகசியங்களை வெளியிட்டு உள்ளார் இயக்குனர் லிங்குசாமி.

Paiyaa Movie Secrets : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் கார்த்தி. லிங்குசாமி இயக்கத்தில் இவரும் தமன்னாவும் இணைந்து நடித்திருந்த திரைப்படம் பையா.

முழுக்க முழுக்க காதல் ரொமான்டிக் படமான இந்த படத்தில் முதலில் நயன்தாரா தான் நடிக்க இருந்தாராம். ஆனால் அவர் கேட்ட சம்பளத்தை கொடுக்க முடியாது என்பதால் அவர் இந்த படத்தில் இருந்து விலகிக் கொண் டுள்ளார். அதன் பின்னர் தமன்னா கமிட்டாகியுள்ளார்.

மாஸ்டர் பட பாட்டில் தல ஸ்பெஷல் விஷயம், ஆதாரத்தைக் கிளறி எடுத்த அஜித் ரசிகர்கள் – புகைப்படத்துடன் இதோ

இப்படத்தைப் பற்றி இயக்குனர் லிங்குசாமி அளித்த பேட்டி ஒன்றில் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். படத்தின் ஷூட்டிங் பெரும்பாலும் பைபாஸ் ரோட்டில் தான் இருக்கும்.

அப்போது என்னிடம் கேரவன் கிடையாது. தமன்னா உடை மாற்ற வேண்டுமென்றால் மூன்று பெண்களை புடவையை விரித்து பிடிக்க சொல்லிவிட்டு அதற்கு இடையே சென்று உடை மாற்றிக்கொண்டு வந்து நடித்துக் கொடுப்பார் என கூறியுள்ளார்.