Pain Relief
Pain Relief

Pain Relief : சுளுக்கு என்பது குழந்தை முதல் பெயவர்கள் வரை பலருக்கு ஏற்படுகிறது. இது குறிப்பாக உடலளவில் அதிகம் வேலை செய்பவர்கள், அதிகம் விளையாடுபவர்களுக்கு ஏற்படுகிறது.

☆ புளிய இலையை அவித்து சூட்டோடு சூடாக சுளுக்கு உள்ள இடத்தில் ஒத்தடம் தந்து கட்ட சுளுக்கு விலகும்.

☆ வெள்ளைப் பூண்டை உப்பு சேர்த்து இடித்து சுளுக்கு உள்ள இடத்தில் தடவி வர சுளுக்கு குணமாகும்.

☆ சுளுக்கு குணமாக தேங்காய் எண்ணையைக் காயவைத்து அதில் கற்பூரத்தைப்போட்டு கலக்கி தேய்த்து வரவும்.

☆ பிரண்டையை பிழிந்து மஞ்சள் தூள், உப்பு அளவாக சேர்த்து காய்ச்சி சுளுக்கு உள்ள இடத்தில் பூசவும்.

☆ மஞ்சள், உப்பு, நல்லெண்ணெய் மூன்றையும் சூடு செய்து சுளுக்கின் மீது பற்று போட சுளுக்கு குறையும்.

☆ புளி,உப்பு இரண்டையும் அரைத்து பற்று போட சுளுக்கு குறையும்.

☆ முடக்கத்தான் இலையை சுண்டக்காய்ச்சி சாப்பிட்டு வந்தால் சுளுக்கு குறையும்.

☆ வாதநாராயணன் இலையை ஒரு கைப்பிடி எடுத்து, அரைத்து சுளுக்கு உள்ள இடத்தில் பற்றுப் போட சுளுக்கு குறையும்.

☆ ஜாதிக்காயை உடைத்து சிறிது பால் சேர்த்து நான்கு அரைத்து கொதிக்க வைத்து சுளுக்கு உள்ள இடத்தில் தடவி பற்று போட வேண்டும்.

☆ முருங்கை பட்டையோடு பெருங்காயம், கடுகு மற்றும் சுக்கை சேர்த்து நன்கு அரைத்து சூடு செய்து, இதமான சூட்டில் சுளுக்கு உள்ள இடத்தில் தடவி பற்று போட்டால் சுளுக்கு நீங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here