Padayappa Removed from Amazon
Padayappa Removed from Amazon

அமேசான் தளத்தில் இருந்து திடீரென படையப்பா திரைப்படம் நீக்கப்பட்டுள்ளது இதற்கான காரணம் என்ன என்பதும் தெரியவந்துள்ளது.

Padayappa Removed from Amazon : தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் படையப்பா.

கே எஸ் ரவிக்குமார் இயக்கிய இந்த படம் வசூல் ரீதியாக விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

பிரம்மாண்ட வெற்றி பெற்ற சந்திரமுகி படத்தின் பட்ஜெட், மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா? – மிரள வைக்கும் முழு விபரம்.!

தொலைக்காட்சி சேனல்களில் பல முறை ஒளிபரப்பப்பட்டாலும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் இதுவரை சலிப்பை ஏற்படுத்தியது இல்லை.

இப்படியான நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைவரும் வீட்டில் இருப்பதால் அமேசான் ப்ரைமிலும் இப்படம் வெளியாகி உள்ளது.

ஆனால் எந்த ஒரு உரிமையையும் பெறாமல் இப்படத்தை அமேசான் ரிலீஸ் செய்துள்ளது. இதனையடுத்து இந்த படத்தை நீக்குமாறு படக்குழு தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனால் அமேசான் நிறுவனம் படையப்பா படத்தை இணையத்தில் இருந்து நீக்கியுள்ளது.