Pachai Vilakku Movie Wins More Awards in Lockdown
Pachai Vilakku Movie Wins More Awards in Lockdown

லண்டனில் டாக்டர் மாறன் இயக்கி நடித்த பச்சை விளக்கு திரைப்படம் பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்துள்ளது.

Pachai Vilakku Movie Wins More Awards in Lockdown : தமிழ் சினிமாவில் பச்சை விளக்கு என்ற சமூக விழிப்புணர்வு உடைய திரைப்படத்தை இயக்கி நடித்து படத்தை தயாரித்தும் இருந்தவர் டாக்டர் மாறன்.

இந்த படம் ஜனவரி மாதத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றது. சாலை பாதுகாப்பு விதிகளை நிச்சயம் மக்கள் பின்பற்ற வேண்டும் என்ற நல்ல ஒரு கருத்தை எடுத்துக் கூறியது.

தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத வகையில் பச்சை விளக்கு திரைப்படத்திற்கு படக்குழுவினர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளம்பரங்களை மேற்கொண்டனர்.

இதுவரை தளபதி விஜய் வாங்கியுள்ள மொத்த விருதுகள் என்னென்ன தெரியுமா? – முழு விவரம் இதோ

இந்த லாக் டவுன் காலக்கட்டத்தில் பச்சை விளக்கு திரைப்படம் பல விருதுகளை அள்ளிக் குவித்து உள்ளது.

Druk இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல், நியூ யோர்க் மூவி அவார்ட்ஸ், அமெரிக்காவின் Aphrodite மூவி அவார்ட்ஸ், அமெரிக்கன் கோல்டன் பிக்சர் இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல், CKF இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் ( UK ), இத்தாலி நாட்டில் நடந்த ப்ளோரன்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவல், ப்ரோஸ்டிபைட் இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல், Tripivill இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் ( இந்தியா ) என பல விருதுகளை வென்றுள்ளது.

இந்தப்படத்தின் நடிகரும் இயக்குனருமான டாக்டர் மாறன் மாணவர்கள் ரோட் சேஃப்டி அண்ட் மேனேஜ்மென்ட் என்ற படிப்பில் PhD முடித்திருந்தார்.

மேலும் இயக்குனரும் நடிகருமான ஒய் ஜி மகேந்திரன் அவர்களிடம் நடிப்பைக் கற்றுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.து.!!

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.