Pachai Vilakku
விபத்தில் இறக்கும் இளைஞர்களின் மரணத்திற்கு பெற்றோர்களே காரணம் என திருவண்ணாமலை ADSP வனிதா காரசாரமாக பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பணத்திற்காக படம் எடுக்க வரும் மனிதர்களுக்கு இடையே நல்ல கருத்துகளை படமாக கொடுக்க வேண்டும் என்ற முயற்சியுடன் வருபவர்கள் மிகவும் குறைவு. அப்படியானவர்கள் பட்டியலில் பச்சை விளக்கு என்ற படத்துடன் இணைந்திருப்பவர் தான் டாக்டர் மாறன்.

இந்த படத்தின் ஒரு பாடல் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் திருவண்ணாமலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ADSP வனிதா பாடலை வெளியிட லயன்ஸ் கிளப் தலைவர் திரு.துரை பெற்று கொண்டார்.

அதன் பின்னர் .ADSP வனிதா அவர்கள் சாலை பாதுகாப்பு குறித்து நடந்த பேச்சு போட்டியில் வென்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பரிசு அளித்து சான்றிதழ் வழங்கினார். இயக்குநர் டாக்டர் மாறன் இசையமைப்பபாளர் வேதம் புதிது தேவேந்திரன் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

குறிப்பாக ADSP வனிதா அவர்கள் பேசும் போது சாலை விதிகளை மீறுவதாலும், பிள்ளைகளின் ஆசைகளுக்காக பெற்றோர்கள் பைக் போன்றவற்றை வாங்கி கொடுப்பதாலும், அதீத வேகத்தில் செல்வதால் தான் அதிகமான விபத்துகள் ஏற்படுகின்றன என பேசினார்.

முன்பு போன்றெல்லாம் நாம் ஐந்து, ஆறு பிள்ளைகளை பெற்று கொள்வதில்லை. ஒன்றோ அல்லது இரண்டோ தான் பெற்று கொள்கிறோம். எனவே அவர்களையும் தேவையில்லாமல் சாலை விபத்தில் இழந்து விட வேண்டாம். பிள்ளைகளின் ஆசைகளுக்காக பைக் போன்றவற்றை வாங்கி கொடுத்து அவர்களின் இறப்பிற்கு நாமே காரணமாக கூடாது என பேசினார்.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் முறையான லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் அவர்களுடன் அவர்களது பெற்றோர்களும் சிறைக்கு செல்ல வேண்டி இருக்கும், வாகனமும் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்தார்.

மேலும் டாக்டர் மாறன் சமூகத்திற்கு தேவையான கருத்துகளை உடைய படமாக பச்சை விளக்கு படத்தை இயக்கியுள்ளார், இந்த படத்தை அனைவரும் தியேட்டரில் பார்த்து விழிப்புணர்வு பெறுமாறு கேட்டு கொண்டார் .

பச்சை விளக்கு திரைப்படம் வெகு விரைவில் திரைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.