Pachai Vilakku
டிஜிட்டிங் மீடியா ஒர்ஸ்க் நிறுனத்தின் டாக்டர் மாறனின் இயக்கம், நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகி இன்று தமிழகமெங்கும் வெளியாகியுள்ள திரைப்படம் பச்சை விளக்கு. இந்த படத்தில் நாயகியாக தீஷாவ் நடித்துள்ளார்.

மேலும் இமான் அண்ணாச்சி, மனோபாலா மற்றும் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

கதைக்களம் :

ஒவ்வொருவரும் சாலை விதிகளை பின்பற்ற வேண்டும், அப்படி சாலை விதிகளை மீறுவதால் என்னென்ன பிரச்சனைகள் எல்லாம் ஏற்படுகிறது என்பதை சமூக நோக்கத்துடன் எடுத்து கூறுவது தான் இப்படத்தின் கதை.

படத்தை பற்றிய அலசல் :

நடிப்பு :

டாக்டர் மாறன், நாயகி தீஷாவ், இம்மான் அண்ணாச்சி, மனோ பாலா என அனைவருமே அவர்களின் கதாபாத்திரத்தை அழகாக செய்து கொடுத்துள்ளனர்.

தொழில்நுட்பம் :

இசை :

வேதம் புதிது தேவேந்திரனின் இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது, பாடல்கள் சுமார் ரகம்.

ஒளிப்பதிவு :

எஸ்.பி பாலாஜியின் ஒளிப்பதிவு படத்திற்கு அழகு செய்துள்ளது.

இயக்கம் :

டாக்டர் மாறன் அனைவருக்கும் தெரிந்த சாலை விதிகளாக இருந்தாலும் அதனை நாம் பயன்படுத்த தவறுவதால் ஏற்படும் விளைவுகளை அழகாக படமாக்கியுள்ளார்.

மொத்தத்தில் பச்சை விளக்கு சாலையை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.