Pachai Vilakku
டாக்டர் மாறன் இயக்கி நடித்துள்ள சாலை விழிப்புணர்வு திரைப்படமான பச்சை விளக்கு முழு முழுக்க பரபரப்பான அண்ணாசாலையில் படமாக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 100 படங்களுக்கு மேல் ரிலீசானால் அதில் மக்களுக்கு நல்ல விசயங்களை சொல்லும் படங்கள் எத்தனை என்பதை விரல் விட்டு எண்ணி விடலாம்.

இந்நிலையில் டாக்டர் மாறன் அவர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றி பல்வேறு ஆராய்ச்சிகளை நடத்தி அதில் சாதித்தது மட்டுமில்லாமல் அதனை படமாகவும் இயக்கியுள்ளார்.

வரும் ஜனவரி 3-ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் சென்னையில் பரபரப்பான அண்ணா சாலையில் படமாக்கப்பட்டுள்ளது.

பச்சை விளக்கு திரைப்படம் நிச்சயம் மக்கள் மத்தியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் படமாக இருக்கும் என டாக்டர் மாறன் நம்பிக்கையுடன் கூறுகிறார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.