Pachai Vilakku Gots More Awards
Pachai Vilakku Gots More Awards

பெண்கள் பாதுகாப்பு மற்றும் சாலை விதிகளைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இரண்டையும் சேர்த்து பச்சை விளக்கு என்ற படத்தில் அழுத்தமாக கூறியுள்ளார் டாக்டர் மாறன்.

Pachai Vilakku Gets More Awards : தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனர் நடிகர் தயாரிப்பாளர் என அனைத்து சுமைகளையும் சுமந்து டாக்டர் மாறன் இயக்கிய திரைப்படம் தான் பச்சை விளக்கு.

இந்த படத்தில் சாலை விதிகளை மீறுவதால் ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றியும் பெண்களுக்கு இணையம் வழியாக காதல் வலை வீசி பின்னர் அவர்களை மானபங்கப்படுத்தி அதனை வீடியோவாக எடுத்து மிரட்டி பணம் பறித்த திருப்பூர், நாகர்கோவில் போன்ற இடங்களில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்த படத்தை இயக்கியுள்ளார்.

டாக்டர் படத்தின் செல்லமே பாடல் படைத்த புதிய சாதனை – அனிருத் வெளியிட்ட வீடியோ, அடித்து தூக்கும் சிவகார்த்திகேயன் ஃபேன்ஸ்!

சாலைகளில் வாகனம் ஓட்டுபவரும், இன்றைய தலைமுறையின் பெண்களும் கட்டாயம் பார்க்கவேண்டிய திரைப்படம் என ரிலீசான போது பாராட்டுக்களை பெற்றது.

மேலும் இந்த படம் தற்போது பல்வேறு விருது விழாக்களில் சிறந்த படத்திற்கான விருதுகளையும் பெற்று வருகிறது. இதனால் படக்குழு மகிழ்ச்சி அடைந்துள்ளது. நல்ல படத்திற்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் என பெருமிதம் கொள்கிறார் இயக்குனர் டாக்டர் மாறன்.

இதுவரை தளபதி விஜய் வாங்கியுள்ள மொத்த விருதுகள் என்னென்ன தெரியுமா? – முழு விவரம் இதோ

இந்த படத்தின் கதையை உருவாக்கி விட்டு பல நடிகர்களை அணுகி கதைக் கூற அவர்கள் கதையில் மாற்றங்களை கூறியதால் தானே ஹீரோவாக இறங்கி நடித்துள்ளார் இயக்குனர் மாறன்.

அதேபோல் கிளாமர் காட்ட மாட்டேன் என இந்த படத்தில் நடித்துள்ள நாயகியும் பத்து மடங்கு சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். இந்த யதார்த்தமான கதை களமும் நடிப்பும் படத்திற்கு பல விருதுகளைப் பெற்றுக் கொடுக்கின்றன.

அடுத்தடுத்து இது போன்ற நல்ல கதைகளை டாக்டர் மாறன் அவர்கள் இயக்க வேண்டும் என படம் பார்த்தவர்கள் பாராட்டியுள்ளனர்.