Paavathai Pokka

நமது முன்னோர்கள் பசுவிற்கு கீரைகள், பழங்கள் முதலியவற்றை கொடுத்தால், அது காமதேனுவுக்கு கொடுப்பதற்கு சமம் என்றனர்.

அதே போன்று ஒரு குறிப்பிட்ட விலங்கு, பறவைகளுக்கு நாம் உணவு அளிப்பதன் மூலம் ஒன்பது கிரகங்களின் தாக்குதலின் தீவிரத்தை குறைக்க முடியும்.

* சூரியன்:
சூரியனின் வாகனம் ▪▪7குதிரைகள் பூட்டிய தேர் . குதிரைக்கு உணவளிப்பதன் மூலம் சூரிய பகவானின் கிரக பிரச்னை உங்கள் ஜாதகத்தில் இருந்தால், அந்த பிரச்னை தீரும்.

* வியாழன் : (குரு பகவான்)
மாட்டுக்கு தீவனம் அல்லது யானைக்கு உணவு அளிப்பதனால்,நம் ஜாதகத்தில் குருபகவானால் பிரச்னை (திருமணம் மற்றும் கல்வி பாதிக்கப்படுவது)என்று இருந்தால் நிவர்த்தியாகும்.

* சந்திரன்:
சந்திர பகவான் பார்வை உங்கள் ஜாதகத்தில் உக்கிரமாக இருந்தால், அதை சரிசெய்ய நீர் உயிரினங்களுக்கு உணவு வழங்கலாம். அதாவது மீன், ஆமை உள்ளிட்ட நீர் வாழ் உயிரினங்களுக்கு உணவு வழங்கலாம்.

* சுக்கிரன்:
இந்த கிரகம் நல் முறையில் வலுப்பெற புறா உள்ளிட்ட பறவைகளுக்கு தானியங்களை உணவாக கொடுக்கலாம். செல்வத்தை அளிக்கக்கூடிய கிரகம் சுக்கிர பகவான்.

* புதன் :
புதன் திசை பிரச்னையாக உள்ளவர்கள், கிளிகளுக்கு உணவு வைப்பது சிறந்தது. அப்படி இல்லையெனில், தங்கள் வீட்டின் மேல் கூரையில் பறவைகளுக்கு உணவுகள் மற்றும் தண்ணீர் வைக்கலாம்.
உங்கள் ஜாதகத்தில் புதன் அதிபதியாக இருக்கும் பட்சத்தில் அவர் மிகச்சிறந்த பேச்சாளராகவும், பல சக்தியை தர வல்லவர்.

* சனி பகவான்:
நம் அனைவரும் மிகவும் பயப்படும் ஒரே கிரகம் சனி. சனி பகவானின் அருளைப் பெற கருப்பு நிற விலங்குகள், பறவைகளுக்கு உணவளிக்கலாம்.

எ. கா : எருமை, கருப்பு நிற நாய், காகம் உள்ளிட்டவை.

* செவ்வாய் :
நாம் ஆடு அல்லது செம்மறி ஆட்டுக்கு உணவு கொடுப்பதன் மூலம் நம் கெட்ட வினை குறைகின்றது. குரங்குகளுக்கு தானியங்கள் அளிக்கலாம். செவ்வாய் கிரகம் திருமண விஷயத்தில் முக்கியமான தடையாக பார்க்கப்படுகின்றது.

* ராகு – கேது:
நாய்க்கு ரொட்டி கொடுப்பதும், எறும்புக்கு சர்க்கரை, மாவு பொருட்கள் உணவாக கொடுப்பதனால்,நம் ஜாதகத்தில் ராகு கேதுவின் தாக்கம் அதிகமாக இருந்தால் அதன் தீவிரம் குறையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here