Paava Punniyam : Spirituality, Aanmeegam news, Spiritual Guidance, spiritual News | Aanmeegam | Spiritual | Paavam Punniyam

Paava Punniyam :

☆ பாவ புண்ணியங்களின் அடிப்படையில் தான் நம் வாழ்க்கை நடைபெறுகிறது இதனால் மகான்களை தரிசிப்பதால் என்னவாகி விடும் என்று பலர் நினைக்கின்றனர்.

☆ உதாரணம்:

ஒருவர் 5 ஆயிரம் ரூபாய்க்கு சில்லரை நாணயங்கள் வைத்து இருக்கிறார் என்று நினைத்துக் கொள்வோம். இந்தச் சில்லறை ஒரு மூட்டை மாதிரி இருக்கும். அதை சுமப்பது மிகவும் கடினமான வேலையாகும்.

பேருந்து முழுவதும் தல புராணம், ஓனர் தீவிர வெறியனா இருப்பாரோ – புகைப்படத்தை பாருங்க!

ஒருவர் அதனைப் பார்த்துவிட்டு ஐந்தாயிரம் சில்லரை காசுகளை வாங்கி கொண்டு அதற்கு பதிலாக ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக ஐந்து தாள்களை கொடுத்தார்.

☆ என்ன நடந்தது:

இப்போதும் அதே ஐந்தாயிரம் ரூபாய்தான் அவரிடம் இருக்கிறது ஆனால் சுமை தெரியவில்லை. பாரம் குறைந்து விட்டது. இதைதான் மகான்கள் செய்கிறார்கள்.

☆ கர்மவினை நம்மிடம் தான் உள்ளது. ஆனால் அந்த கர்ம வினையினால் நாம் அவதிப்படாத படி, கர்மவினையை எதிர்கொள்ளும் மனோதைரியத்தை மகான்கள் நமக்கு அளிக்கிறார்கள்.

☆ நமது ஆத்ம சக்தியை பலப்படுத்தி விடுகிறார்கள். பாவ புண்ணியங்களில் சமநிலை எழுதிய மகான்கள் சன்னதியில் நமது பாவ வினை அழியும் என்பது மற்றுமொரு அசைக்கமுடியாத உண்மை. அவர்கள் சமாதியிலும் கூட இன்னும் இது நிகழ்கிறது.

☆ இதனை வார்த்தைகளில் சொன்னால் புரியாது. நீங்களும் சென்று மகான்களை தரிசித்து அனுபவ உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here