பா ரஞ்சித் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோ கை கோர்க்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Pa Ranjith in Upcoming Movie : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் பா ரஞ்சித். மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான இவர் அதன் பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து கபாலி மற்றும் காலா என இரண்டு படங்களை இயக்கினார்.

பா ரஞ்சித் உடன் கைகோர்க்கும் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோ.. அடுத்த படம் பற்றி வெளியான அதிரடி தகவல்

தற்போது ஆர்யாவை வைத்து சார்பட்டா பரம்பரை என்ற படத்தை இயக்கி வருகிறார். அதுமட்டுமல்லாமல் இவர் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, பரியேறும் பெருமாள் என்ற படத்தையும் தயாரித்து இருந்தார்.

இவர் அடுத்ததாக இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் சூர்யா ஹூரோவாக நடிக்க உள்ளதாகவும் பா ரஞ்சித் அவரிடம் கதை கூறி இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.