இயக்குனர் பா ரஞ்சித்தின் அடுத்த ஹீரோ யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Pa Ranjith in Upcoming Hero : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் பா ரஞ்சித். இவரது இயக்கத்தில் இறுதியாக வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

பா ரஞ்சித்தின் அடுத்த ஹீரோ யார் தெரியுமா?

இந்த படத்தை தொடங்கி ரஞ்சித் அடுத்ததாக நட்சத்திரங்கள் நகர்கிறது என்ற படத்தை இயக்க உள்ளார். அதன்பிறகு இவர் யாரை இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது பா ரஞ்சித் அடுத்ததாக விக்ரமை வைத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

அட்டக்கத்தி, மெட்ராஸ் உள்ளிட்ட படங்களை இயக்கிய பிறகு இந்த விக்ரமுக்கு ஒரு கதை கூறிய அதை திரைக்கதையும் எழுதி வைத்துள்ளார். அதன் பின்னர் ரஜினியை வைத்து அடுத்தடுத்து இரண்டு படங்கள் இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால் இந்த படம் தள்ளிப் போய்க் கொண்டே வந்தது.

விக்ரமும் பிஸியாக இருந்து வந்ததால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது எச்ச தெரிந்திருக்கிறது படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக ரஞ்சித் விக்ரமை வைத்து படத்தை இயக்கும் இறங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.