சந்தோஷ் நாராயணன் மோதல் ஏற்பட்ட மோதல் காரணமாக பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்திற்கு இசையமைக்க போவது யார் என்பது தெரியவந்துள்ளது.

Pa Ranjith and Vikram Movie Music Composer Update : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் அடுத்ததாக துருவ நட்சத்திரம், கோப்ரா, பொன்னியின் செல்வன், மகான் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக உள்ளன. இந்தப் படங்களைத் தொடர்ந்து அடுத்ததாக ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் விக்ரம்.

பொதுவாக பா ரஞ்சித் இயக்கும் படங்களுக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பதுதான் வழக்கம். ஆனால் சமீபத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக இந்த படத்தின் இசையமைப்பாளரை மாற்ற ரஞ்சித் முடிவெடுத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

பாலியல் குற்றச்சாட்டு கூறிய டென்னிஸ் வீராங்கனை மாயம் : பெண்கள் அமைப்பு அதிரடி அறிவிப்பு

ஆம் முதல் முறையாக ரஞ்சித் மற்றும் விக்ரம் இணைந்துள்ள இந்த படத்திற்கு அனிருத்தை இசையமைக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

உங்க பொண்ணு Guest Role நடித்தது ஏன் Director Priyadarshan Reveals Marakkar Movie Secrets