P Vasu Story for Thalapathy Vijay

முப்பது வருடத்திற்குப் பிறகு சூப்பர் ஹிட் படம் ஒன்று ரீமேக்காக இருப்பதாகவும் அதில் விஜயை நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரபல இயக்குனர் தெரிவித்துள்ளார்.

P Vasu Story for Thalapathy Vijay : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் பி வாசு. பல முன்னணி நடிகர்களை வைத்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

இவரது இயக்கத்தில் சத்யராஜ், குஷ்பு, கவுண்டமணி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் நடிகன். இன்று வரை ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படும் படமாக இருந்து வருகிறது.

இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் முடிவடைந்துவிட்ட நிலையில் தற்போது இப்படத்தை ரீமேக் செய்ய பி வாசு திட்டமிட்டுள்ளார்.

நடிகன் படத்தின் ரீமேக்கில் தளபதி விஜய் நடித்தால் நன்றாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். தளபதி விஜயிடம் இதுகுறித்து பேச முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தளபதி 65 படத்திற்காக தளபதி விஜய் இயக்குனரை தேடி வரும் நிலையில் தளபதி 65 படத்தை இயக்க ஆசைப்படும் இயக்குனர்களில் லிஸ்டில் பி வாசுவும் இணைந்துள்ளார்.

நடிகன் படத்தின் ரீமேக் தளபதி விஜய்க்கு பொருந்துமா பொருந்தாதா? பி வாசு இயக்கத்தில் நடிக்க அவர் ஒப்புக் கொள்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.