P.T Selvakumar

தேர்தலில் 40,000 நடுத்தர மக்களின் உரிமையை பறித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கன்னியாகுமரி கலெக்டரிடம் முறையிட்டு மனு கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் பி.டி செல்வக்குமார்.

தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராகவும் கலப்பை மக்கள் இயக்கம் என்ற அமைப்பின் தலைவராகவும் இருந்து ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நல திட்டங்களை வழங்கியும் அவர்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்து வருபவர் பி.டி செல்வகுமார்.

இவர் இன்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து தேர்தலில் நடந்த முறைகேடுகள் குறித்தும் 40,000-க்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் லிஸ்டில் இல்லாமல் போனது குறித்தும் முறையிட்டு மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில் ஒவ்வொரு குடிமகனும் வாக்களிக்க வேண்டும், வாக்களிப்பது நம்முடைய ஜனநாயக கடமை, ஓட்டுக்கு பணம் வாங்குவதும், குடும்பத்துக்கு குற்றம் என்றெல்லாம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் தேர்தல் ஆணையம் தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரியில் 40,000 வாக்காளர்களின் ஒட்டு உரிமையை இல்லாமல் செய்திருப்பது ஜனநாயக படுகொலை.

தன்னுடைய ஒட்டு பறிக்க படும் போது அந்த குடிமகனின் வேதனை கொஞ்சம் நஞ்சமாக இருக்காது.

இது போன்று மெத்தனமாக செயல்பட்ட அனைத்து அதிகாரிகளின் மீதும் உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு மட்டுமில்லாமல் அவர்களை டிஸ்மிஸ்ஸும் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வரும் சனிக்கிழமை ( 27.04.19 ) அன்று உண்ணாவிரதம் இருக்க போவதாவும் கூறியுள்ளார்.

பி.டி செல்வகுமார் அவர்களின் இந்த முயற்சிக்கு பல்வேறு திரைத்துறை பிரபலங்களும் தங்களது ஆதரவினை அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.