Thalapathy-Vijay
இப்படியே போனால் தமிழ் சினிமா அழிந்து தான் போகும் என பிரபல தயாரிப்பாளரான பி.எல் தேனப்பன் பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகராக தயாரிப்பாளராக வலம் வருபவர் பி.எல் தேனப்பன். இவர் தான் சிம்புவை வைத்து வல்லவன் படத்தை தயாரித்திருந்தார்.

இவர் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் இப்போதுள்ள நடிகர்கள் தங்களது உறவினர்கள் தயாரிப்பிலேயே நடித்து கொள்கின்றனர்.

உறவினர்கள், நண்பர்களை தயாரிப்பாளராக்குகின்றனர். அவர்களை வளர்த்து விட்ட தயாரிப்பாளர்களை மறந்து விடுகின்றனர்.

இப்படியே போனால் தமிழ் சினிமா அழிந்து தான் போகும், நடிகர்களே படத்தை தயாரித்து வெளியிட்டு கொள்ள வேண்டியது தான் என பேசியுள்ளார்.

தளபதி விஜய் தற்போது தன்னுடைய உறவினர் தயாரிப்பில் விஜய் 64 படத்தில் நடித்து வருகிறார் என்பதால் பி. எல் தேனப்பன் விஜயை தான் சாடுகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

PL Thenappan

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.