P Chidambaram mobile phone Switched Off
P Chidambaram mobile phone Switched Off

P Chidambaram mobile phone Switched Off – டெல்லி: முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.

மேலும் அவர் எங்கே இருக்கிறார்? என்பது தொடர்பாக அவரது கார் டிரைவரிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதை அவசர வழக்காக விசாரிக்க நீதிபதி ரமணா மறுப்பு தெரிவித்துவிட்டார்.

ஒபாமா, பில் கிளிண்டன் வீட்டில் வெடிகுண்டு : பதற்றத்தில் அமெரிக்கா!!

இது தொடர்பாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முடிவெடுப்பார் என்று நீதிபதி ரமணா அறிவித்துவிட்டார்.

ஆனால் நீதிபதி ரஞ்சன் கோகாய் மதியத்துக்கு மேல் இந்த பிரச்சினைக்கான முடிவு எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே இதற்கு நடுவில் ப.சிதம்பரத்தை கைது செய்துவிட வேண்டும் என்று சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். இதனால் தற்போது நாடெங்கும் பரபரப்பு நிலவி வருகிறது.

இது தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், “ப.சிதம்பரத்தின் செல்போன் எங்கே செயல்படுகிறது என்பதை அறிந்து கொண்டு அவர் இருப்பிடத்தை கண்டுபிடித்து விடலாம் என்று முயற்சி செய்தோம்.

ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அவரது போன் கடைசியாக டெல்லியில் உள்ள லோதி சாலையில் செயல்பட்டுள்ளது” இவ்வாறு தெரிவித்தனர்.

ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு…உச்சநீதிமன்றம் புது அறிவிப்பு.!!

மேலும் ‘ப.சிதம்பரம் எங்கே இருக்கிறார் என்பது குறித்து அவரது கார் ஓட்டுநரிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆனால் அவர் எங்கே இருக்கிறார் என்று தனக்கு தெரியாது! ‘ என்று ஓட்டுநர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.