COVOD19 Update 26.09.20
COVOD19 Update 26.09.20

Oxford Corona Vaccine Testing in India : கொரோனா நோய் தொற்றுக்கு எதிரான ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம் தயாரித்துள்ள தடுப்பு மருந்தினை இந்திய மக்கள் மீது இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனைகளை கடந்த 25ஆம் தேதி முதல் பரிசோதிக்க சீரம் மையத்திற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

இரண்டாம் கட்ட பரிசோதனைக்குப் பிறகு அதனுடைய விரிவான தகவலை இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திடம் அளிக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதன்பிறகு மூன்றாம் கட்ட பரிசோதனைகளை மேற்கொள்ளப்படும். அதாவது ஒருவரிடம் ஒரு முறை தடுப்பு மருந்து செலுத்திய பின்பு அவரின் உடல்நிலையில் ஏற்படும் மாற்றத்தை ஆய்வு செய்த பின் அடுத்து 29 நாட்களுக்கு பிறகு மீண்டுமொரு தடுப்பு மருந்தை செலுத்தப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படும்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் 18 வயது நிரம்பிய சுமார் 1600 நபரிடம் சீரம் மையம் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. இந்த தடுப்பு மருந்தின் மூலம் கொரோனாக்கு ஒரு முடிவு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.