Aleka First Look

Aleka First Look : இதுக்கு ஓவியா எவ்வளவோ மேல் என கூறும் அளவிற்கு ஐஸ்வர்யா தத்தா நடித்துள்ள அலேக்கா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபலமாக முயன்று முயன்று முடியாமல் போய் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் ஓவியா, ஐஸ்வர்யா தத்தா போன்ற நடிகைகள்.

சமீபத்தில் ஓவியா நடித்துள்ள 90ml படத்தின் ட்ரைலர் வெளியாகி பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. காரணம் ட்ரைலர் முழுவதும் ஆபாச வார்த்தைகளும் காட்சிகளுமே இடம் பெற்றிருந்தது.

இதனையடுத்து தற்போது ஓவியாவின் இந்த சர்ச்சைகளை மிஞ்சும் அளவிற்கு ஐஸ்வர்யா தத்தா ஆரி நடித்துள்ள அலேக்கா என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காரணம் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பார்ப்பதற்கே ஆபாசமாக உள்ளது. இதனால் நெட்டிசன்கள் பலரும் இதுக்கு ஓவியாவே மேல் போலயே என நொந்து கொள்கின்றனர்.

மேலும் இது போன்ற ஆபாசமான காட்சிகள் எல்லாம் தமிழ் சினிமாவை எங்கே கொண்டு செல்ல போகிறது என்றே தெரியவில்லை எனவும் வருத்தப்படுகின்றனர்.

ஆனால் ஆரி இது காமத்தை பற்றிய படமல்ல காதலை பற்றிய படம் என இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஷேர் செய்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.