
என்னையும் கைது செய்யுங்கள் என நடிகை ஓவியா பதிவிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Oviya Tweet Against Central Government : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஓவியா. களவாணி இந்த படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமான இவர் அடுத்தடுத்து படங்களில் நடித்து பெரிய அளவில் ரீச் இல்லாததால் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் பங்கேற்றார்.

தற்போது சமூக வலைதள பக்கங்களில் மத்திய அரசிற்கும் பிரதமர் மோடிக்கு எதிராக கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். சமீபத்தில் மோடிக்கு எதிராக டெல்லியில் போஸ்டர் ஒட்டியவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதனால் நடிகை ஓவியா இது ஜனநாயக நாடா என கேள்வி எழுப்பியதோடு என்னையும் கைது செய்யுங்கள் என பதிவிட்டுள்ளார்.