Oviya Tweet About Goback Modi

கோ பேக் மோடி என்று பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் நடிகை ஓவியா.

Oviya Tweet About Goback Modi : தமிழ் சினிமாவில் களவாணி என்ற திரைப்படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமானவர் ஓவியா. இந்தப் படத்தைத் தொடர்ந்து இவர் சில படங்களில் நடித்தார்.

ஆனால் ஓவியாவுக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் அமையவில்லை. இதனால் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியின் மூலமாக உலகம் முழுவதும் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார்.

இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கோ பேக் மோடி என்று பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாளை சென்னை வரவுள்ள நிலையில் ஓவியா இவ்வாறு பதிவிட்டு இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஓவியாவின் பதிவுக்கு ஆதரவு எதிர்ப்பு என இரண்டும் கிடைத்து வருகிறது.