Raghava Lawrence & Oviya

Raghava Lawrence & Oviya : பள்ளிகள் தான் எதிர்கால சந்ததிகளை வடிவமைக்கும் கோயில் என்று சொல்லலாம்.

வறுமை கோட்டுக்கு கீழே உள்ள மாணவர்கள் மாணவிகள் கல்வி கற்க அடைக்கலமாகும் இடம் அரசாங்க பள்ளிகள் தான்.

அரசாங்கத்தோடு இணைந்து மக்களும் தரம் உயர்த்தினால் தான் பள்ளிகளில் படிக்கும் மாணவர் மாணவிகள் நல்ல கல்வியை கற்க முடியும். அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விட்டிருந்தார்.

அரசாங்க பள்ளிகளில் படித்த முன்னாள் மாண மாணவிகள் பள்ளிகளை தத்தெடுத்து சீரமைத்து தந்தால் உதவியாக இருக்கும் என்று சொல்லி இருந்தார்.

அதை கேட்ட ராகவா லாரன்ஸ் சென்னை பாடி அருகிலுள்ள அரசாங்க பள்ளி ஒன்றையும் செஞ்சி அருகிலுள்ள பள்ளி ஒன்றையும் தத்தெடுத்தார்…

பழைய கட்டிடமாக இருந்த பள்ளிகளை சீரமைத்து தனியார் பள்ளிக்கு நிகராக மாற்றி கொடுத்திருக்கிறார்.

செஞ்சி அருகிலுள்ள மேல்மலயனூர் பக்கத்தில் அரசாங்க பள்ளிக்கு கழிப்பிடம் மற்றும் சிதிலமடைந்த பகுதிகளை புதுப்பித்து வர்ணம் அடித்து புது கட்டிடம் மாதிரி மாற்றி இருக்கிறார்.

அக்டோபர் 29 ம் தேதி (இன்று) ராகவா லாரன்ஸுக்கு பிறந்த நாள் என்பதால் பள்ளியின் திறப்பு விழாவை வைத்திருக்கிறார்கள் அந்த பள்ளி நிர்வாகத்தினர்…

லாரன்ஸின் தாயார் அறுவை சிகிச்சை முடிந்து வீட்டில் இருப்பதால் லாரன்ஸ் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்வதோடு நடிகை ஓவியா விழாவில் கலந்து கொள்ள வைத்துள்ளார்..

29 ம் தேதி மாலை 4 மணி அளவில் ஓவியா செஞ்சி, மேல் மலையனூர் பள்ளி திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

இது பற்றி ராகவா லாரன்ஸ் கூறியதாவது..

இரண்டு பள்ளிகளோடு நின்று விடப் போவதில்லை…என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பள்ளிகளை சீரமைக்க முடிவு செய்திருக்கிறேன்.

என்னால் தான் படிக்க முடிய வில்லை. படிக்கிற குழந்தைகளாவது நிம்மதியாக படிக்கட்டுமே என்றார் லாரன்ஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here